fbpx

Job | ரூ.62,000 வரை சம்பளம்..!! இந்து சமய அறநிலையத்துறையில் வேலை..!! தேர்வு கிடையாது..!!

இந்து சமய அறநிலையத்துறையின் தூத்துக்குடி அலுவலகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பப்படுகின்றன. கோவில் நிர்வாக பணிகளில் ஏற்படும் பணியிடங்கள், துறையின் கீழ் உள்ள அலுவலகங்களில் ஏற்படும் பணியிடங்கள் போன்ற காலிப்பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் விவரம் : டிரைவர் 4 , அலுவலக உதவியாளர் 4

கல்வித்தகுதி : கல்வி தகுதியை பொறுத்தவரை டிரைவர் வேலைக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

வயது வரம்பு : டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய இரு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் 32-வயது நிரம்பாதவர்களாகவும் இருக்க வேண்டும். எம்பிசி, பிசி, உள்ளிட்ட பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

Read More : School | ‘இனி இந்த வயதிலும் ஆசிரியர் பணியில் சேரலாம்’..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

சம்பளம் : டிரைவர் பணிக்கு மாதம் ரூ.19,500 – 62,000 வரையும், அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.15,700 – 50,000 – வரையும் கிடைக்கும்.

தேர்வு முறை : தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : வரும் 20.03.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முழு விவரம் : https://hrce.tn.gov.in/hrcehome/index.php

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை,

அழகேசபுரம், மெயின் ரோடு,

தூத்துக்குடி – 628 001.

English Summary : TNHRCE Recruitment 2024 | Apply for Latest Job Vacancies

Chella

Next Post

Andhra: தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சி!… பாலாற்றில் தடுப்பணை கட்ட இன்று அடிக்கல் நாட்டும் ஜெகன்மோகன் ரெட்டி!

Mon Feb 26 , 2024
Andhra: ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். கர்நாடகாவில் 90 கி.மீ., ஆந்திராவில் 45 கி.மீ, தமிழகத்தில் 225 கி.மீ. பயணிக்கிறது பாலாறு. ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் அங்குள்ள தடுப்பணைகளில் சேமிக்கப்படுவதால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காததால் பாலாற்று […]

You May Like