fbpx

ப்ளீஸ் என்னை விட்டுடுங்க… கதறியும் விடாத கடைக்காரர்…….! ஆப்பு வைத்த நீதிமன்றம்…….!

தன்னுடைய கடைக்கு தின்பண்டங்களை வாங்க வந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் 3️ வருடங்களுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அதாவது, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த ரஹீம் என்ற கமர்தீன் (47). இவர் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் அந்த கடைக்கு தின்பண்டம் வாங்குவதற்காக வந்த, 9 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து இருக்கிறார். அதோடு, இது தொடர்பாக வெளியே கூறினால், உன்னை கொலை செய்து விடுவேன் என்று அந்த சிறுமியை மிரட்டி இருக்கிறார் கமர்தீன்.

ஆனாலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி பெற்றோரிடம் இது குறித்து கூறி, கதறி அழுதிருக்கிறார். அதோடு, இது குறித்து பெற்றோர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில், தேனி மாவட்ட, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கின்ற மகளிர் விரைவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கமர்தீனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கோபிநாதன், தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அபராதத்தை கட்டத் தவறினால், மேலும் ஒரு மாத காலம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Post

”இது ஜெயிலர் வாரம்”..!! மாமனாரை காக்கா பிடிக்கும் தனுஷ்..? வைரலாகும் ட்விட்டர் பதிவு..!!

Mon Aug 7 , 2023
நடிகர் தனுஷ் ‘இது ஜெயிலர் வாரம்’ என்று திரைப்படத்துக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக […]

You May Like