இந்தாண்டு ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையில் வந்தது. அதாவது சனி, ஞாயிறு ஏற்கனவே விடுமுறை என்ற நிலையில், திங்கள்கிழமை ஆயுதபூஜையும், செவ்வாய்க்கிழமையான இன்று விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறையாகும்.
இந்நிலையில், இந்த தொடர் விடுமுறை காரணமாக கர்நாடகாவில் இருந்து 3 சிறுவர்கள் தங்கள் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில், வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் அருகே, ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
வண்டலூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது மின்சார ரயில் மோதி தூக்கி வீசப்பட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் 3 பேரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பதும், இதில் 3 பேருமே மாற்றுத்திறனாளிகள் என்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து தாம்பரம் இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்கள் சுரேஷ் (11), விஜி மற்றும் மஞ்சுநாத் என்பது தெரிய வந்துள்ளது.