fbpx

சிகரெட் பிடிப்பதை நிறுத்த உதவும் ஸ்மார்ட் நெக்லஸ்!… சிகாகோ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

ஒரு நபர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட்டுகளை புகைக்கிறார், அதனை எவ்வளவு சுவாசிக்கிறார் என்பதை கண்டறியும் வகையில் புகைப்பிடிக்கும் அளவை மதிப்பிடும் வகையில் ஸ்மார்ட் நெக்லஸ் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர். அதன்படி, அமெரிக்காவில் ஆண்டுதோறும் 4,80,000 க்கும் அதிகமானோர் புகைபிடித்தல் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், முந்தைய அமைப்புகளை விட அதிக நம்பகத்தன்மையுடன், பயனர் புகைபிடிப்பதைக் கண்டறியும் சாதனமான ஸ்மார்ட் நெக்லஸ் ஒன்றை சிகாகோ வடமேற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ஸ்மார்ட் நெக்லஸ் ஸ்மோக்மான் (Smokeman) என்றழைக்கப்படுகிறது. நீலநிறத்தில் காட்சியளிக்கும் இந்த நெக்லஸ், புகைப்பிடிப்பவரின் தனியுரிமையை முழுமையாகப் பராமரிக்கவும் மற்றும் வெப்பத்தை மட்டுமே கண்காணிக்கவும் உதவுகிறது.

இதுகுறித்து, வடமேற்கு பல்கலைக்கழகப் பேராசிரியரான மூத்த புலனாய்வாளர் நபில் அல்ஷுராஃபா கூறுகையில், “இது ஒரு நபர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட்டுகளை புகைக்கிறார் என்பதைத் தாண்டியது. “சிகரெட் எப்போது பற்றவைக்கப்படுகிறது, அந்த நபர் அதை வாயில் வைத்து ஒரு பஃப் எடுக்கும்போது, எவ்வளவு சுவாசிக்கிறார், எவ்வளவு நேரம் சிகரெட்டை வாயில் வைத்திருக்கிறார் என்பதை கண்டறிய முடியும். என்று கூறினார்.

Kokila

Next Post

மற்ற காய்கறிகளை விட இதில் அப்படி என்ன ஸ்பெஷல்!... மூலிகை மந்திரம் கொண்ட பீர்க்கங்காய்!

Sat Feb 18 , 2023
எடை குறைப்பு, மஞ்சள் காமாலை, தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகள், கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை உள்ள எண்ணிலடங்கா மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் அனைத்துவிதமான காய்கறிகளும் எண்ணற்ற மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளன. அதல் ஒருவகையான பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப் பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி […]

You May Like