உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல், ஒரு வயதான பெண்ணை அவருடைய மகன் நடு ரோட்டில், தரதரவென்று இழுத்துச் சென்ற வீடியோ, இணையதளத்தில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரபிரதேசம் மாநிலம் பாக்பத் அருகே குஹால் கிஷன்பூர் பரால் என்ற கிராமத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில், வயதான ஒரு பெண்மணியை, அவருடைய மகன், நடு தெருவில், தரதரவென்று இழுத்துச் செல்லும் காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
இதைப் பார்த்த சமூக வலைதள வாசிகள் பலரும், கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். வயிற்றில் சுமந்து பெற்ற தாயை இதுபோன்று கொடுமை செய்வது வெட்கக்கேடான செயல் என்று, அந்த வீடியோவை பார்த்து, பலரும், தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அதோடு, சமூக வலைதளங்களில், வெளியான அந்த வீடியோவில், வயதான அந்த பெண்மணி, தன்னுடைய மகனிடம் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சுகிறார். ஆனாலும், சில கிராம மக்கள், அந்த இளைஞரை தடுக்க முயற்சி செய்கிறார்கள். இருந்தாலும், அந்த இளைஞர் கொடூரமாக தன்னுடைய தாயை துன்புறுத்தும் காட்சிகளும், அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன.
பின்னர், அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள், இந்த காட்சிகள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில், வெளியிட்டுள்ளனர். அத்துடன், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் இந்த வீடியோவின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, காவல்துறையினரின் பார்வைக்கும், இந்த சம்பவம் சென்றது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, இந்த வீடியோ பழமையானது தான். ஆனாலும், இந்த இந்த விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான விசாரணைகள் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.