fbpx

சுபாஷே..!! பைக்கில் சென்றவர் மீது காரை விட்டு ஏற்றிய மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்..!! டிரைவிங் லைசன்ஸ் ரத்து..!!

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் சுபாஷ் எனும் கேரக்டரில் நடித்த ஸ்ரீநாத் பாசி, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாக புகாரளிக்கப்பட்ட நிலையில், கைதான அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ரீநாத் பாசி. இவர், அண்மையில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர், அந்த படத்தில் குணா குகையில் உள்ள 200 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிக் கொள்வார். இவரை அவருடைய நண்பர்கள் எப்படி மீட்கிறார்கள்? என்பதுதான் இப்படத்தின் கதை.

இந்த படத்தில் அவருக்கு ரத்த காயங்களை தத்ரூபமாக காட்டுவதற்காக ஓரியோ பிஸ்கெட்டுகளை கொண்டு மேக்கப் போடப்பட்டதாம். அந்த பிஸ்கெட் மீது எறும்பு மொய்க்காமல் இருக்க அவர் படாதபாடுபட்டாராம். இவர், அண்மையில் கேரளாவில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், அவர் மற்றொரு வழக்கிலும் சிக்கினார்.

அதாவது, எர்ணாகுளத்தில் காரில் சென்ற போது அவரது கார், இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில், பைக்கில் பயணம் செய்த முகமது பஹீம் என்பவர் படுகாயமடைந்தார். மேலும் நடிகர் ஸ்ரீநாத் பாசி, அந்த நபருக்கு என்ன நடந்தது என்பது குறித்து கூட கேட்காமல், காரில் நிற்காமல் சென்றுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் எர்ணாகுளம் மத்திய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில், நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்ட பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அலுவலர் தற்காலிகமாக ரத்து செய்திருக்கிறார். அவரது ஓட்டுநர் உரிமம் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் ஒரு மாதத்திற்கு வாகனங்களை இயக்க முடியாது.

Read More : இன்று 13 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு..!! மிக கனமழை எங்கு பெய்யும்..? வானிலை மையம் எச்சரிக்கை..!!

English Summary

Srinath Basi, who played the character of Subhash in Manjumel Boyz, was arrested and released on bail after he was reported to have caused the accident and failed to stop.

Chella

Next Post

பருவமழையால் தமிழகம் தவிப்பது ஏன்?. இவ்வளவு மழை பெய்வதற்கு என்ன காரணம்?

Thu Oct 17 , 2024
Why is Tamil Nadu suffering due to monsoon? What causes so much rain?

You May Like