fbpx

மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகள் மீதான ஆய்வு நிறைவு..! நாளைக்குள் அறிக்கை தாக்கல்..!

கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகள் மீதான ஆய்வு நிறைவடைந்த நிலையில், இன்று அல்லது நாளை நீதிமன்றத்தில் சர்மர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி (17)‌, கடந்த மாதம் 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைக் கண்டித்து கடந்த 17ஆம் தேதி நடந்த போராட்டம் கலவரமானது. இதில், பள்ளி வாகனங்கள், மாணவர்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டது.

மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகள் மீதான ஆய்வு நிறைவு..! நாளைக்குள் அறிக்கை தாக்கல்..!

இருப்பினும் மனுததாரர் தரப்பில் மருத்துவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்கப்படவில்லை. இதனை எதிர்த்து மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, மாணவியின் உடல், மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவரது உடலை பெற்றுக்கொள்ளுமாறு வீட்டில் கடந்த 19ஆம் தேதி வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், மாணவி உடலை வாங்க பெற்றோர் முன்வராததால், காவல்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்போவதில்லை என்றும் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகள் மீதான ஆய்வு நிறைவு..! நாளைக்குள் அறிக்கை தாக்கல்..!

உயர்நீதிமன்ற உத்தரவின்படி பிரேத பரிசோதனை முடிவுகள், வீடியோ காட்சிகள் ஜிப்மர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு பெற்றது. இன்று அல்லது நாளை விழுப்புரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Chella

Next Post

’எடப்பாடியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது’? - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Wed Aug 17 , 2022
அதிமுக பொதுக்குழுவை ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து தான் கூட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி […]
செம ’ட்விஸ்ட்’ வைத்த தேர்தல் ஆணையம்..!! அதிமுக இனி எடப்பாடி கையில்..!! ஓபிஎஸ் கதை அவ்ளோதானா..?

You May Like