fbpx

”இது இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம்”..! – சோனியா காந்தி

”வரலாற்றுச் சிறப்பு மிக்க ராகுலின் பாதயாத்திரையை தொடங்கி வைக்க என்னால் நேரில் வர முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்” என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை “இந்திய ஒற்றுமை பயணம்” என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியும் அவருடன் உள்ளார். எனவே, இவர்கள் இருவரும் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

”இது இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம்”..! - சோனியா காந்தி

அதில், ”நான் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறேன். இதனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி வைக்க என்னால் நேரில் வர முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். புகழ்பெற்ற பாரம்பரியமிக்க நமது மாபெரும் கட்சிக்கு இது மிக முக்கியமான நிகழ்வு ஆகும். இதனால், நமது இயக்கம் புத்துயிர் பெறும் என்று நான் நம்புகிறேன். இது இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம் ஆகும். இந்த பாத யாத்திரையில் முழுமையாக பங்கேற்கும் கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

”இது இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம்”..! - சோனியா காந்தி

இந்த யாத்திரையில் பல்வேறு மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர் வந்து இணைவார்கள். அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் நான் தினந்தோறும் எண்ணத்தாலும், உணர்வாலும் பங்கேற்பேன். நிச்சயமாக இந்த யாத்திரை தொடர்ந்து நடைபெறுகிறபோது, நான் அதை நேரலையில் பார்ப்பேன். எனவே, நாம் நமது தீர்மானத்தில் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் முன்னோக்கி நடைபோடுவோம்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Chella

Next Post

அடிப்படை கணித திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

Thu Sep 8 , 2022
அடிப்படை கணித திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) நடத்திய ஆய்வின்படி, அடிப்படை கணித திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அத்தகைய மாணவர்களால், பொதுவாக எண்களை அடையாளம் காணுதல், கூட்டல் மற்றும் கழித்தல் போன்ற மிக அடிப்படையான கணித […]

You May Like