fbpx

Watch Video | சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்கள்..!! டிராகனை சுற்றி சுற்றி வரும் கியூட் வீடியோ..!!

ஃபுளோரிடா அருகே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் வந்த விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி ஏராளமான டால்பின்கள் நீந்திச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமியை அடைந்தனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமி கோளுக்கு வந்தனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் அன்-டாக் ஆகி பிரிந்துள்ளது. அதிகாலை புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் தரையிறங்கியது. அவர்களுடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவர் டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்பினர். இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் பூமியை அடைந்தனர்.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அந்த நாட்டின் விண்வெளி அமைப்பான நாசா உடன் இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த புதிய விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஃபுளோரிடா அருகே கடல் பகுதியில் பாராசூட்கள் உதவியுடன் டிராகன் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதையடுத்து, தயார் நிலையில் இருந்த படகு, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. விண்கலம் படகில் ஏற்றப்பட்டு, ஒவ்வொரு வீரர்களாக விண்கலனிருந்து பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இதற்கிடையே, டிராகன் விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் நீந்திக் கொண்டிருந்தன. இந்த காட்சிகள் நாசா ஒளிபரப்பிய லைவ் வீடியோவில் பதிவாகியுள்ளன. பூமிக்குத் திரும்பிய வீரர்களை டால்பின்கள் வரவேற்பதாக நாசா விஞ்ஞானிகள் நகைச்சுவையாக தெரிவித்துள்ளனர்.

Read More : நாம் தினமும் பயன்படுத்தும் வீட்டுப் பொருட்களால் புற்றுநோய் ஆபத்து..!! இனியும் இந்த பொருட்களை பயன்படுத்தாதீங்க..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

English Summary

A video of a large number of dolphins swimming around the spacecraft carrying Sunita Williams and Butch Wilmore as it crashed into the ocean near Florida is going viral on social media.

Chella

Next Post

செக்..! வாக்காளர் அடையாள அட்டை எண்ணை ஆதாருடன் இணைக்க நடவடிக்கை...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Wed Mar 19 , 2025
Action to link voter ID card number with Aadhaar...! Election Commission announces

You May Like