செயற்கை நுண்ணறிவு (AI) பல பணிகளை எளிதாக்கியுள்ள நிலையில், அதன் ஆபத்தான அம்சங்கள் குறித்து பெரிய கூற்றுக்களும் எச்சரிக்கைகளும் அவ்வபோது மனிதர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. அந்தவகையில், முன்னாள் கூகுள் நிர்வாகி மோ கவ்டட், AI இன் எதிர்காலம் குறித்து கூறிய கணிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எதிர்வரும் 15 ஆண்டுகளில், AI மனிதர்களுக்கு நரகமாக இருக்கும் என்றும், அதன் மோசமான கட்டம் 2027 ஆம் ஆண்டு முதல் தொடங்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். […]

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டர் ஏழாவது நாளாக தொடர்கிறது. இதுவரை ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான் மற்றும் நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் அகல்-தேவ்சர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏழாவது நாளாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 6, 2025) இரவு முழுவதும் கடுமையான துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு நாள் முழுவதும் […]

வாரத்திற்கு மூன்று முறை வறுத்த உருளைக்கிழங்கு சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை 20% அதிகரிக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ இதழான தி பிஎம்ஜேயில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வறுத்த உருளைக்கிழங்கிற்கு பதிலாக, வேக வைத்து, சுட்டு அல்லது மசித்து சாப்பிடுவது, ஆபத்தை அதிகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த வகையான உருளைக்கிழங்கையும் முழுதானியங்களால் (whole grains) மாற்றினால், வகை 2 நீரிழிவு […]

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்ட 51 அரசு மருத்துவர்கள் பணிக்கு ஒழுங்காக வராத காரணத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வீனா ஜார்ஜ் புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசின் மருத்துவ கல்வித்துறையின் கீழ் ஏராளமான மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பல மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 51 […]

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகின. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் […]