பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இந்த விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல்வர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், […]

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் இலக்கினை நிறைவேற்றும் நோக்கில், அக்கட்சியின் தேர்தல் பணி வியூகங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கான அடித்தளமாக, மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் திமுகவில் இணைக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். […]

தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருகிறது. முன்பு தினசரி பாதிப்பு 10 ஆக இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து 60-ஐ கடந்துள்ளது. பருவமழைக் காலத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்து வரவிருக்கும் இரண்டு மாதங்களில் இந்த நோய்த்தொற்று பாதிப்பு மேலும் இருமடங்காக உயரக்கூடும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் […]

பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உயர்கல்வியை முற்றிலும் வணிகமயம் ஆக்குவதற்கு வழிவகுக்கும் ‘தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை’த் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதலமைச்சர் அவர்களை வலியுறுத்துகிறோம். நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகங்கள் […]

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் கட்பால் பகுதியைச் சேர்ந்தவர் சுதர்ஷன் (எ) ரவிராஜ் ரஞ்சித் ஜாதவ் (45). கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, மதன்வாடி பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்திற்கு அடியில் கருப்புக் கம்பளியில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையின் தகவல்படி, சுதர்ஷன் தனது மனைவி தீபாளியை (30 வயது) இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மனைவியின் கொலையை […]

வாரத்திற்கு ஒருமுறை மது அருந்துவதால் பெரிய அளவில் எந்தப் பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், இந்த பழக்கம் கூட உங்கள் ஆரோக்கியத்தில் நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஃபரிதாபாத்தில் உள்ள யாதர்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உள் மருத்துவம் மற்றும் வாதவியல் துறை இயக்குநர் டாக்டர் ஜெயந்தா தாகுரியா அளித்த பேட்டியில், “அரிதான சமயங்களில் நீங்கள் அதிகப்படியாக மது குடித்தாலும், அது […]