சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் பாரில் பெண் ஒருவரை அறைக்கு அழைத்த விவகாரத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரத்தில் ரிசார்ட் வைத்திருக்கும் வின்ஸ்டன் பிரபு (37) மற்றும் அவரது தம்பி திவாகர் அரவிந்த் (35) உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர், ஹோட்டலில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அதே பாரில் கொளத்தூரைச் சேர்ந்த அரவிந்தன் […]

பீடி மற்றும் திரைப்பட துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 1-ம் வகுப்பு முதல் கல்லூரி, ஐடிஐ / டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் […]

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவைச் சேர்ந்த அல்லியந்தல் பகுதியைச் சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 45), ஒரு தொழிலாளி. கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று தனது வீட்டிலிருந்தபோது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டன. இருப்பினும், திடீரென மருத்துவமனையில் இருந்து […]

பிரதமரின் கிசான் திட்டத்தில் மேலும் அதிக தமிழக விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வேலூரில் உள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நேற்று வருகை தந்தார். பிரதமரின் தனம் தானியம் வேளாண் திட்டம், தேசிய பருப்பு வகைகள் இயக்கம், இயற்கை வேளாண்மை இயக்கம், பருப்பு வகைகள் மீதான […]

இந்தியாவில் இனிப்பு வகைகளை உட்கொள்ளும் பழக்கம் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக நீரிழிவு நோய் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, குறிப்பாக நகரங்களில் இனிப்பு நுகர்வு அதிகரித்திருப்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில், மாதத்திற்கு 3 முறை அல்லது அதற்கு மேல் இனிப்புகளைச் சாப்பிடும் குடும்பங்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள […]

பிரபல நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் 9 நிகழ்ச்சியின் நடுவராக அறிமுகமானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், நிகழ்ச்சியின் தற்போதைய மந்தமான மற்றும் சர்ச்சைக்குரிய போக்கு, தொகுப்பாளரான அவருக்கே சலிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், விஜய் சேதுபதி தனது அதிருப்தியை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். “வீட்டில் போட்டியாளர்கள் நடந்து கொள்ளுறது ரசிக்கும் படியாக இருக்கணும்… இல்ல சகிச்சுக் கொள்ளுற மாதிரியாவது இருக்கணும். ஆனா, […]

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வழங்க வாய்ப்புள்ளது. தமிழ் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறையில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். அந்த வகையில், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே, கந்த சஷ்டி என்றழைக்கப்படும். கந்த சஷ்டிக்கு முன் 7 நாள்கள் பக்தர்கள் […]

கிராமப்புறச் சூழலில் வளர்ந்தவர்களுக்கு இளம் மஞ்சள் நிறத்தில், ஏலக்காய் மற்றும் சுக்கு மணத்துடன் கூடிய சீம்பாலின் சுவை அலாதியானது. இன்றைய நகரங்களில் செயற்கை முறையிலும் சீம்பால் விற்கப்பட்டாலும், பசு வளர்ப்பாளர்களிடம் இருந்து நேரடியாகப் பெறும் கலப்படம் இல்லாத கெட்டியான சீம்பாலே உண்மையான சத்துக்களைக் கொண்டது. குழந்தை பிறந்தவுடன் தாயிடமிருந்து முதலில் சுரக்கும் நோய் எதிர்ப்புச் சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் (கொலஸ்ட்ரம்) எவ்வளவு முக்கியமோ, அதேபோன்ற முக்கியத்துவம் கன்று ஈன்ற பசுவின் […]

சுபமுகூர்த்த நாளான 27ம் தேதி மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ளதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாளான 27.10.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் […]

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை சுமார் 60% அதிகரித்துள்ளதுடன், வெள்ளியின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பலரும் தங்கள் முதலீடுகளை இந்த விலைமதிப்பற்ற உலோகங்கள் பக்கம் திருப்பியுள்ளனர். இருப்பினும், மற்ற சொத்துகளைப் போலவே தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகளுக்கும் வரி விதிமுறைகள் பொருந்தும் என்பதை முதலீட்டாளர்கள் அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் […]