தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளில் உள்ள பயனாளிகளின் விவரங்களை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி கைவிரல் ரேகை பதிவு (eKYC) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் முன்னுரிமை மற்றும் […]

சிவகங்கை அருகே காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தங்களது சொகுசு காரில் பழலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு வந்துள்ளனர். அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் காரை நிறுத்திவிட்டு, அதன் அருகே அமர்ந்து இருவரும் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு விரைந்து வந்த மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று, திடீரென அந்த இளைஞர்களை நோக்கி ஆக்ரோஷமாகப் […]

கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்குப் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகத்தின் வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நீடிக்கிறது. அதேபோல், தெற்கு ஆந்திரக் கடலோரம் மற்றும் ராயலசீமா வான்வெளியில் 1.5 […]

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்குத் தாவுவதும், அதனால் மக்களின் வரிப்பணத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதும் வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் தங்களது […]

மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தனியார் துறை மாதச் சம்பளதாரர்களுக்குப் பயனளிக்கும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) திட்டத்திற்கான மாதாந்திர ஊதிய உச்சவரம்பை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிஎஃப் சேமிப்புத் திட்டத்தில் இணைவதற்கான தற்போதைய மாதாந்திர ஊதிய உச்சவரம்பு ரூ.15,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை […]

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பதவி விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. நகர பொருளாளர் பதவியைப் பெற்றுத்தர பணம் பேசப்பட்டதாக எழுந்த புகாரும், அது தொடர்பான ஆடியோ பதிவும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சாயல்குடி பகுதியைச் சேர்ந்த தவெக உறுப்பினர் பெத்தராஜ், கட்சியில் புதிதாக இணைந்த நிலையில், தனது உறவினர் ஒருவருக்கு நகர பொருளாளர் பதவி பெற்றுத்தர முயன்றுள்ளார். இதற்காக சாயல்குடி மேற்கு ஒன்றிய […]

இன்றைய இளம் தலைமுறையினர் பல்வேறு கவனச்சிதறல்களில் சிக்கி, படிப்பு மற்றும் எதிர்கால இலக்கை மறந்து செல்லும் சூழலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண் குழந்தைகள் தங்களது கனவை நோக்கி தொடர்ந்து பயணித்து கவனம் ஈர்த்துள்ளனர். தினசரி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் பெற்றோரின் பிள்ளைகளான இவர்கள், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற இலக்குடன் படித்து, தற்போது நீட் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர். குடும்பத்தின் பொருளாதார நிலை படிப்புக்கு […]

ரூ.4.5 லட்சம் வரை செலவு செய்து புதிய ஸ்மார்ட்போன் வாங்குவது ஒருபுறம் இருக்க, அதே அளவிலான பட்ஜெட்டில் தினசரி குடும்பப் பயன்பாட்டுக்கு ஒரு கார் வாங்க முடியும் என்றால் எப்படி இருக்கும்? ஆப்பிளின் புதிய மடிக்கக்கூடிய ஐபோன் டியோவின் அதிகபட்ச 2TB மாடல் ரூ.4,49,900-க்கு விற்பனைக்கு வந்துள்ள நிலையில், இதே பட்ஜெட்டில் கிடைக்கும் சில கார்கள் கவனம் பெற்றுள்ளன. இந்தியாவில் குறைந்த பட்ஜெட்டில் கார் வாங்க விரும்புபவர்களுக்கு மாருதி சுசுகியின் […]

13 வயதிலேயே தனது பெற்றோருக்காக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. அப்போது வாடகை வீட்டில் வசித்து வந்த தனது குடும்பத்திற்காக, எதிர்காலத்தில் சம்பாதிக்கும் பணத்தில் வீடு வாங்குவதை இலக்காக வைத்திருந்த அவர், அதற்காக ஒரு வித்தியாசமான முறையையும் பின்பற்றியுள்ளார். வெற்றுத் தொகையுடன் ஒரு காசோலையை எழுதி, அந்தக் கனவை தினமும் மனதில் காட்சிப்படுத்தி வந்துள்ளார். பாட்காஸ்டர் ராஜ் […]

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இரண்டு அழகு கிரீம்கள் தொடர்பாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. CDSCO வெளியிட்ட எச்சரிக்கையில் Chandni Whitening Cream மற்றும் Goree Beauty Cream ஆகிய இரண்டு கிரீம்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாக […]