அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் […]

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21.10.2025 அன்று விடுமுறை வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால், சென்னை, திருச்சி, ஓசூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. திங்கள் கிழமை தீபாவளி முடித்துவிட்டு, மீண்டும் […]

கடந்த 4 ஆண்டுகளாக தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்து வந்தார்.. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.. அப்போது அண்ணாமலை தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா கூறியிருந்தார்.. ஆனால் தற்போது வரை அண்ணாமலைக்கு வேறு எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.. கடந்த 4 ஆண்டுகளாக தமிழக பாஜக மாநில தலைவராக […]

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. ஆனால் பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. சென்னையை பொறுத்த வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்கள் […]

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத் தலைமைப் பேருந்து நிலையத்திற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 16 வயது சிறுமி ஒருவர் தனது தம்பியுடன் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவர்களைப் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதை நம்பிச் சிறுமி தனது தம்பியுடன் ஆட்டோவில் ஏறினார். சிறிது தூரம் சென்றதுமே, அந்த ஆட்டோவில் ஆட்டோ ஓட்டுநரின் நண்பர் ஒருவரும் ஏறிக்கொண்டார். […]

80 மற்றும் 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை நளினி. வெள்ளித்திரையில் புகழின் உச்சியில் இருந்த சமயத்தில், ‘மக்கள் நாயகன்’ என்று கொண்டாடப்பட்ட நடிகர் ராமராஜனை இவர் திடீரென திருமணம் செய்துகொண்டது அப்போது பெரும் பரபரப்பை கிளப்பியது. சுமார் 13 ஆண்டுகள் நல்லபடியாக நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை, கருத்து வேறுபாடு காரணமாக 2000-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. சமீபத்தில் […]

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த போது திமுக அரசை உருட்டுக் கடை அல்வா என்று விமர்சித்திருந்தார்.. மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி உருட்டுக் கடை அல்வா என்ற பெயரில் ஒரு பாக்கெட்டை கொடுத்தார்.. அதில் பிரித்து பார்த்தால் அல்வாவுக்கு பதில் பஞ்சு தான் இருக்கும்.. அதே போல் தான் திமுக கொடுத்த வாக்குறுதிகளும் என்று விமர்சித்திருந்தார்.. […]

தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் ஆணவக் கொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்று கூறினார்.. அப்போது பேசிய அவர் “ ஆணவ படுகொலைக்கு சாதியை தாண்டி பல காரணங்கள் உள்ளன.. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆணவக் கொலைக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது.. அவர்கள் எதன் பொருட்டும் தப்பி ஓடக் கூடாது எனவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று தேர்தல் ஆணையம் கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இந்த வழக்கை தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையமும், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வந்த நிலையில் […]