தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கையாக மின்சார தளவாடப் பொருட்களை போதிய அளவில் இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் மற்றும் துணை நிறுவனங்கள் இடையிலான உயர்நிலை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய அவர்; பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து வட்டங்களிலும் தேவையான தளவாடப் பொருட்களை […]

ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை பெரும்பாலான இடங்களிலும், இடி, […]

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது காதலியை பார்க்கச் சென்றபோது, அவரது தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகப்பேரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 18 வயது மாணவன், மாணவி ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் மாணவியை அய்யனாவரத்தில் உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும், செல்போன் […]

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் உறவு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் பரவி வரும் சில புகைப்படங்கள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது வைரலாகி வரும் புகைப்படத்தில் மாதம்பட்டியும், ஜாய் கிரிஸில்டாவும் லிஃப்டில் நெருக்கமாக இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில், ரங்கராஜ் திருமணமானவர் என்பதை அறிந்தும் […]

சென்னை மேடவாக்கம் விஜயநகர் பூங்கா தெருவைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (38). இவர், கூலி வேலை செய்து வரும் நிலையில், இவருக்கு மீனா (40) என்ற மனைவியும், 22 வயதில் ஒரு மகனும், 21 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சத்தியசீலன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவி மீனாவை துன்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் அருண் என்பவருடன் மீனாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரின் கொடுமைகளால் […]

மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இந்தப் படம் 1991ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், விஜயகாந்தின் சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு போன்ற முன்னணி நடிகர்களின் 100-வது திரைப்படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில், விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படம் வசூலை வாரிக் குவித்தது. மேலும், இந்தப் படத்தில்தான் மன்சூர் அலிகான் […]

தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தின்படி, டெலிவரி வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. உணவு, பார்சல் போன்ற பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள், இந்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மானியத்தைப் பெற, விண்ணப்பதாரர்கள் முதலில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஸ்விக்கி, சொமாட்டோ, அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் […]

நாடு முழுவதும் வரவிருக்கும் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம், பல்வேறு பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோருக்கு பெரும் நிம்மதி அளிக்க உள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ‘வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி 2.0’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது..? டிராக்டர் : டிராக்டருக்கான ஜிஎஸ்டி வரி 12% இல் […]