விவசாயக் கூலிகளாக இருக்கும் ஏழை, எளிய பெண்களின் சொந்த நிலம் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்க, தமிழ்நாடு அரசு ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ என்ற ஒரு சிறப்பான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, இத்திட்டத்திற்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவே எளிமையாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. […]

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று உலகெங்கும் வெளியான இந்தப் படம், இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், அமீர் கான் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் வெளியான முதல் நான்கு நாட்களிலேயே ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகப் படத்தைத் தயாரித்த சன் […]

சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவரது பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் பள்ளிகளில் சாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும் ஆசிரியர் மீது பெறப்படும் புகார் […]

இன்று தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ‘தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், 12-ம் தேதி […]

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்… ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. மேலும் […]

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து அவரது 2-வது மனைவியும், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா அளித்துள்ள பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது. ஜாய் கிரிஸில்டா தனது நேர்காணலில், ”கடந்த 2023 டிசம்பரில் மாதம்பட்டி ரங்கராஜைத் திருமணம் செய்ததாகவும், இந்த திருமணம் குறித்து ரங்கராஜின் பெற்றோருக்கும், அவரது தம்பிக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். ரங்கராஜ் தனது முதல் மனைவியைப் பிரிந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து பெறப் […]

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் இதனை வரவேற்றுள்ளனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க மாட்டேன் என்பதில் உறுதியாக கூறி வருகிறார்.. அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா என்ற எதிர்பாப்பு நிலவி வருகிறது.. மேலும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் இணைந்தால் இபிஎஸ் நெருக்கடியாக மாறும் என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் […]