இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தபோது உதயநிதி என்ன பேசினார்?. போதைப்பொருளுக்கு எதிராக அப்போதைய துணை முதல்வராக இருந்த உதயநிதி என்ன செய்தார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், கோவையில் மாணவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை திமுக முன்மொழிந்தது. இந்தத் தீர்மானத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகே மாநிலத்தில் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி இடையே நடந்த காரசார விவாதத்திற்கு மத்தியில், அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தொடர்ந்து, “100 நாள் சாதனை எனப் பெருமை பேசும் த.வெ.க அரசு, இந்த 100 நாட்களில் […]
2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனையடுத்து ஆகஸ்ட் 7, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை […]
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான, பயன்பாடின்றி காலியாக கிடக்கும் நிலங்களை பயன்படுத்தி சூரிய மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் ஒரே இடத்தில் […]
கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களை சேர்ந்த தமிழர்கள்அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக மாநில வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாக […]
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு செயல்படுவதற்கு ஓராண்டு காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணியை அண்ணாமலை தலைமை தாங்கி நடத்தினார். அப்போது பேசிய அண்ணாமலை, ஆகஸ்ட் மாதத்தைச் சுற்றுச்சூழல் மாதமாகக் கடைப்பிடித்து 20 லட்சம் மரக்கன்றுகளை நடும் […]
ஸ்டாலின் மிசாவில் தான் கைதானாரா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியுமா? என்று உதயநிதிக்கு தவெக சவால் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”அரசியலாகவும், கருத்தியல் ஆகவும் மோதும் வக்கும் திராணியும் இல்லையென்றாலும், வாய்ச்சவடால் விடுவதில் மட்டும் ஆபாசநிதிக்கு குறையொன்றுமில்லை. மிசாவில் கைதானவர் அப்பா என்று திமுகவினரும், திமுகவின் அடிவருடிகளும் உருட்டுவதற்கு, இது தாத்தா காலம் என்றெண்ணி வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியிருக்கிறார் உளறல்நிதி. என்ன […]
கர்நாடகாவில் 3 தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த கொடூர செயல் கடும் கண்டனத்துக்குரியது. குற்றம் இழைத்தவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாக தெரிகிறது. இதனை […]
அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்திற்குள் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாடி, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வீடியோவை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக பதிவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட அரசியல் சார்ந்த நிகழ்வுகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்துள்ளது. இந்த நடைமுறையை மீறி, தேனி மாவட்டம் பெரியகுளம் […]
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 2 முக்கிய அமைச்சர்களின் செயல்பாடுகள், முதல்வர் விஜய்க்கு அரசியல் ரீதியாக புதிய தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என்ற பேச்சு டெல்லி அரசியல் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் மீது தொடக்கத்திலேயே ஊழல் புகார்கள் எழ தொடங்கியுள்ள நிலையில், மற்றொரு அமைச்சர் மத்திய அரசையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தொடர்ந்து காட்டமாக விமர்சித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் […]

