தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது.. தேர்தலை ஒட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.. இந்த நிலையில் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதில் பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4,500 பேர் […]

சென்னை வானகரகத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.. இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. அதன்படி, கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத திமுக அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. நீட், கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலையை 150ஆக உயர்த்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்து தீர்மானம். […]

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த உத்தமபாளையம் வட்டமலை அணை அருகேயுள்ள வனப்பகுதியில், கடந்த டிசம்பர் 6ஆம் தேதி, உடல் கருகிய நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரன்பட்டி ஏகலனையாம்பாளையம் புதூரைச் சேர்ந்த செல்லத்துரையின் மனைவி வடிவுக்கரசி (45) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சம்பவம் […]

15 – வது நிதி ஆணையத்தின் கீழ் , தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 7,523.06 கோடி ரூபாய் மானியத் தொகை விடுவிப்பு. 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில், மாநிலங்களில் உள்ள தகுதி வாய்ந்த கிராம பஞ்சாயத்து, தொகுதி பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு, பதினைந்தாம் நிதி ஆணையத்தின் மானியத் திட்டங்களின் கீழ், மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை விடுவித்துள்ளது. 15 – வது நிதி ஆணையத்தின் […]

பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் வரும் 15-ம் தேதி […]

தமிழக அரசுப் பள்ளிகளில் தொழில் துறை பயிற்சி மையங்கள் (ஐடிஐ) அமைப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநருடன் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (ஐடிஐ) அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளிகளிடம் […]

பாக்நீரிணை கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதி, தென்தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, குமரிக் கடல் பகுதிகளையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வரும் 13-ம் தேதி வரை பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக சென்னை வானிலை […]