குஜராத் முதல்வர் பூபேந்திர படேலைத் தவிர 16 குஜராத் அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.. குஜராத் ஆளுநர் அமைச்சர்களின் ராஜினாமா கடித்ததை ஏற்றுக் கொண்ட நிலையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை மதியம் 12:39 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை […]

தலைமை நீதிபதியை அவமதித்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அட்டர்னி ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த வாரம் நீதிமன்ற அறைக்குள் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது செருப்பு வீச முயன்றதற்காக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு இந்திய வழக்கறிஞர் ஜெனரல் ஆர். வெங்கடரமணி ஒப்புதல் அளித்துள்ளார். 71 வயதான வழக்கறிஞரின் நடவடிக்கைகள் அவதூறானது மட்டுமல்ல, […]

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் பைலட்-இன்-கமாண்டரான கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை, இந்த துயரச் சம்பவம் குறித்து சுயாதீனமான, நீதித்துறை மேற்பார்வையிடப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அக்டோபர் 10 ஆம் தேதி இந்திய விமானிகள் கூட்டமைப்புடன் (FIP) கூட்டாக தாக்கல் […]

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட சூத்திரத்தைப் பின்பற்றாவிட்டால், எந்தவொரு பிராண்டாலும் ஒரு பொருளை ORS என்று அழைக்க முடியாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது. அக்டோபர் 14 அன்று வெளியிடப்பட்ட இந்த உத்தரவு, உணவு வணிகங்கள் இந்த வார்த்தையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து கடுமையான விதிகளை அமைக்கிறது. தவறாக பெயரிடப்பட்ட ORS பிராண்டுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் குழந்தை மருத்துவரான டாக்டர் […]

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முடிவை இந்தியா இன்று மீண்டும் ஒருமுறை ஆதரித்து, “நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் ” இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் நிலையான முன்னுரிமையாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா வாங்காது என்ற தெரிவித்ததை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி பிரதமர் டிரம்ப் மற்றும் அமெரிக்காவைப் பார்த்து பயப்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அவரின் பதிவில் “ பிரதமர் மோடி டிரம்பைப் பார்த்து பயப்படுகிறார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவரது கருத்துக்களுக்கு முரணாக […]

நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் மெய்நிகர் அமர்வில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படும் வீடியோ மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, வழக்கறிஞர்களின் ஒழுக்கம் மற்றும் தொழில்முறைக் கண்ணியம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆன்லைன் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு சற்று முன்னதாகப் […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யப்பா லே-அவுட்டில் வசித்து வந்த பிரபல தோல் நோய் மருத்துவர் கிருத்திகா, மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் டாக்டர் மகேந்திரா 6 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கிருத்திகாவும், அவரது கணவர் மகேந்திராவும் மருத்துவர்கள். அறுவை சிகிச்சை நிபுணரான மகேந்திரா, கர்நாடகாவின் உடுப்பி, மணிப்பாலைச் சேர்ந்தவர் மற்றும் பெங்களூரில் உள்ள […]

இந்தியா – ஆப்பிரிக்க அரசியலில் ஒரு முக்கிய நபராக திகழ்ந்த கென்ய எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா (Raila Odinga), தமது 80-வது வயதில் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்தபோது திடீரென மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேவமாதா மருத்துவமனை, ஒடிங்காவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமரான ஒடிங்கா, எதிர்க்கட்சித் தலைவராக 1997 முதல் 2022 வரை ஐந்து முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி […]