AI தாக்கம் காரணமாக, இந்தியாவில் ஐ.டி., துறையில் பணிபுரியும் 20 லட்சம் பேரின் வேலைகள் பறிபோக வாய்ப்புள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமண்யம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் தற்போது ஐ.டி., துறையில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஏ.ஐ., தாக்கத்தால், 20 லட்சம் வேலைகள் பறிபோகக்கூடும். எனினும், பணிபுரிவோர் ஏ.ஐ., தொடர்பான […]

மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இணைந்த சுரேஷ் கோபி, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பாஜகவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் […]

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலகர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் துணை அதைகாரிகளுக்கு இம்மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆன்லைன் மதிப்பீடு, வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல் உள்ளிட்ட பயிற்சியை தேர்தல் ஆணையம் நடத்தியது.இந்த பயிற்சியில் 243 வாக்குச்சாவடி அதிகாரிகள் 1418 துணை […]

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கரூருக்கு விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில் கருர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவிருக்கிறார் விஜய். அதேசமயம் இத்தனை நாட்கள் அவர் அங்கு செல்லாமல் […]

பீகார் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் மக்களை 40 வயதுக்கு முன்பே உயிரிழக்க செய்யும் மர்மநோய் ஒன்று கடுமையாக பாதித்து வருகிறது. பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தூத் பானியா கிராமத்தில் வசிக்கும் மக்கள், 40 வயதுக்கு மேல் வாழ்வது அரிதாக உள்ளது. சுமார் 250 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில், கடுமையான எலும்பு மற்றும் தசை வலி ஏற்பட்டு, படிப்படியாக பக்கவாதம் உண்டாகி, முன்கூட்டிய மரணம் ஏற்படுகிறது. 56 […]

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சௌந்தர்யா, காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே வளாகத்தில் உள்ள வாடகை வீட்டில், தினேஷ் என்பவரும் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். வேலை தேடி வந்த இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இரு குடும்பத்தாருக்கும் இவர்களின் காதல் தெரிந்த நிலையில், 8 மாதங்களுக்கு முன்பு எளிமையான முறையில் இவர்களுக்குத் […]

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான விமலா (பெயர் மாற்றப்பட்டது) என்ற மென்பொருள் நிறுவன ஊழியர், கொரோனா காலகட்டத்தில், அதாவது 2021-ஆம் ஆண்டில் வேலையை இழந்துள்ளார். இதனால், நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். பின்னர், பாலியல் தொழிலில் அவர் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவப் பரிசோதனையில் இவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியான போதிலும், சிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்டதால், தனது தோழி கீதா (பெயர் மாற்றப்பட்டது) என்பவரின் வழிகாட்டுதலில் […]

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி, ஆணுறை இல்லாமல் உறவு கொண்டு, தவறான மருத்துவ ஆலோசனையால் கருக்கலைப்பின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கினால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர்ஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், தொழில் நிமித்தமாக ஃபரிதாபாத்திற்கு வந்துள்ளார். அங்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரியும் அனில் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அனில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை […]

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையில் அடுத்த கட்டப் பாய்ச்சலை ஏற்படுத்தும் வகையில், மும்பையில் நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2025 நிகழ்ச்சியில், இந்திய ரிசர்வ் வங்கியுடன் (RBI) இணைந்து தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) யுபிஐ சேவையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இனி யுபிஐ மூலம் பணம் செலுத்த, ரகசிய PIN எண்ணை உள்ளிடுவது அல்லது தொலைபேசியை எடுத்துச் செல்வது அவசியமில்லை. அதற்குப் பதிலாக, பயனர்கள் முகம் அல்லது […]

நாகரிகமான உலகில் வாழ்ந்து வந்தாலும், உலகின் சில பகுதிகளில் இன்னும் பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இன்றும் உலகின் சில பகுதிகளில் இந்த கொடிய செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரியுமா? ஆம் இந்த கொடிய நடைமுறையானது இன்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும் உள்ளது. இது தவிர ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் இப்பழக்கம் உள்ளது. இந்தியாவிலும், […]