மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது. 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக கர்நாடக பெரும் மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் துறை மற்றும் மண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சர் என். செலுவராயசாமி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை நிறைவேற்ற சுமார் 12,500 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், தற்போது சுமார் 20,000 ஏக்கர் நிலம் அடையாளம் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
புதுச்சேரியில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மாதாந்திர உணவு தானிய மானிய தொகையை தடையின்றி பெறுவதற்கு, ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைப்பேசி எண்களை உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், தவறினால் மானியம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன […]
தேசிய தேர்வு முகமை (NTA) தனது தேர்வு முறையில் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தனது குழுக்களிலிருந்து 600 நிபுணர்களை நீக்கிவிட்டு, புதிய வல்லுநர்களைப் பணியமர்த்தத் தொடங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வுக்கும் முன்பாக வினாத்தாள்களை நான்கு கட்டங்களாகத் தீவிர ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களின் வினாத்தாள்களில் கடுமையான குறைபாடுகள் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், கேரள முதல்வர் சதீசன், […]
கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் வனப்பகுதியில் கடந்த 15ஆம் தேதி அதிகாலை ரோந்து சென்றபோது, வேட்டை கும்பல் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதால் தற்காப்புக்காகப் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 தமிழர்கள் உயிரிழந்ததாக கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காட்டில் காணாமல் போன தங்களது கால்நடைகளை தேடிச் சென்றவர்களையே வனத்துறையினர் திட்டமிட்டுச் சுட்டுக் கொன்றுவிட்டு பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் கிராம மக்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி […]
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 பேர் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இரு மாநிலங்களுக்கு இடையேயான பெரிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிடக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் காட்டமாகத் தெரிவித்துள்ளார். சாமராஜநகர் துப்பாக்கிச் சூடு […]
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. […]
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நீதிமன்ற நண்பரும் மூத்த வழக்கறிஞருமான விஜய் ஹன்சாரியா அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். வழக்கறிஞர் சினேகா கலிதா மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த 96 பக்க அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த பல புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் […]
அந்தமான் தீவுகளுக்கு தேன்நிலவு சென்ற இடத்தில், மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்ட காரணத்தால் கணவர் அவரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த நிகில் மிஸ்ரா என்பவருக்கும், ராம்பகர்தால் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கும் மே 30, 2023 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணின் வீட்டார் ரூ.20 லட்சம் ரொக்கம், ஒரு கார் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பிலான வரதட்சணைப் பொருட்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், […]
மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதுடன், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவையும் மத்திய அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தேசிய அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. டெல்லி மேலிடத்திற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சரவையில் திமுகவிற்கு 2 அமைச்சர் பதவிகளையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் […]

