சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ராணுவ முகாம் மீது ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 9 வீரர்களை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்கிமின் லாச்சென் மாவட்டத்தில் உள்ள சாட்டனில் நேற்று மாலை 7 மணியளவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 6 வீரர்கள் இன்னும் காணவில்லை என்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
As the COVID-19 pandemic continues to spread, Dr. Soumya Swaminathan, former chief scientist of the World Health Organization (WHO), has weighed in on whether the 2020 disaster could be repeated.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் காதல் கதையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பலருக்கு தெரியாது. ஜெய்சங்கரின் மனைவி கியோகோ ஜெய்சங்கர் ஜப்பானைச் சேர்ந்தவர். 1996 முதல் 2000 வரை டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஜெய்சங்கர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டபோது இருவரும் சந்தித்தனர். இந்த நேரத்தில், அவர் கியோகோ சோமேகாவாவுடன் நட்பு கொண்டார், அது படிப்படியாக […]
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களை உள்ளடக்கிய யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) சேவையில் இந்தியா ஒரு மகத்தான சாதனையை செய்து உள்ளது. இந்தியாவில் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் பரிவர்த்தனைகள் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. இந்தநிலையில், நாட்டில் மே மாதம் 1868 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. […]
இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பான கட்டணங்களை அண்மையில் ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்தது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும், தங்கள் வங்கிக் கணக்கு அல்லாத பிற வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முறை பணம் […]
உத்தரப் பிரதேசத்தில் லட்டில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தடகள வீராங்கனையை ஆசிரம சாமியார் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் 30 வயது தேசிய அளவிலான டேக்வாண்டோ தடகள வீராங்கனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரின்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், ஆசிரமத்தில் ஒரு கடை அமைக்க […]
பொதுவாக, அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும் என்பது வங்கியின் விதிமுறைகள் ஆகும். அப்படி, பராமரிக்காத பட்சத்தில் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் வங்கியை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் தான், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை பொதுத்துறை வங்கியான கனரா வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி, கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் […]
வடக்கு சிக்கிமில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 1,200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் தொடர் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதால் பாலங்கள் சேதமடைந்து மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடுமையான மழைப்பொழிவு காரணமாக வடக்கு சிக்கிமில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமாக்கியுள்ளது, இதனால் 1,200 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மங்கன் மாவட்டத்தில் அமைந்துள்ள லாச்சென் மற்றும் லாச்சுங்கின் தொலைதூரப் பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர். கனமழையால் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்துள்ளது. 2025 ஜனவரி முதல் கொரோனா பாதித்த 28 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி […]
ஆபரேஷன் சிந்தூர் என்ற கருப்பொருளில் ஒரு கட்டுரைப் போட்டியை பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும், டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் 78வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளும் பிரத்யேக வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சகம் X இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் […]

