சவூதி அரேபியாவின் மதீனா அருகே இன்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்ததில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பெண்கள் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, ஆபரேஷன் சிந்தூர் பற்றிப் பேசி உள்ளார்.. 88 மணி நேர விரைவான பணி “வெறும் ஒரு டிரெய்லர்” என்று கூறிய அவர், ஒரு வலுவான மற்றும் தெளிவான செய்தியை வெளியிட்டார். எந்தவொரு நாடும் அரசு ஆதரவுடன் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் போது, அது இந்தியாவிற்கு ஒரு தீவிர கவலையாக மாறும் என்றும், அது தொடர்ந்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலாட் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், மூளைச்சலவை செய்யப்பட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியாக கட்டாயப் பாலின மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குரார் கிராமப் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த கல்லூரி மாணவி, சில மாதங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட கும்பலை சந்தித்துள்ளார். படிப்படியாக மூளைச்சலவை செய்த அக்கும்பல், மாணவியைப் பாலின மாற்றத்திற்கு […]
இந்தியாவின் எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்காவிலிருந்து LPG இறக்குமதி செய்வதற்கான “வரலாற்று சிறப்புமிக்க” ஒப்பந்தத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்களன்று முறையாக அறிவித்தார். இந்தியாவின் LPG கொள்முதல் ஆதாரங்களை விரிவுபடுத்தும் செயல்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்று அவர் கூறினார். இந்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான […]
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக மேலும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் ஒரு கடுமையான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் நாடுகள் மீது கடுமையான அபராதங்களை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை அவர் ஆதரித்துள்ளார். உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதே இந்த கடுமையான நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஆகும். டிரம்ப்பின் நேரடி எச்சரிக்கை : இதுதொடர்பாக […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான சேவை மாற்றத்தை அறிவித்துள்ளது. எஸ்பிஐ-யின் ஆன்லைன் வங்கிச் சேவை தளமான OnlineSBI மற்றும் மொபைல் செயலியான YONO Lite ஆகியவற்றில் கிடைக்கும் mCASH எனப்படும் உடனடிப் பணப் பரிமாற்ற சேவை, வரும் டிசம்பர் 1 முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. இந்த mCASH சேவை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவையில்லாமல், பெறுநரின் […]
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் தலைநகர் டாக்கா மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.. சில இடங்களில் தீ வைப்பு சம்பவஙள் நடந்ததையும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்ததையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வங்கதேசத்தில் புதிய வன்முறைகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் துறைகளுக்கு கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வங்கதேச […]
ஆன்லைன் வங்கி மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி வங்கிகளும் தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை (.com அல்லது .co.in) மாற்றி, இனி .bank.in என்ற புதிய டொமைன் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று […]
எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு ஜனவரி மாதம் […]
மிசோரமில் தண்ணீரில் பரவிய இரைப்பை குடல் அழற்சி வெடிப்பு நோயால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில் உள்ள காகிச்சுவா கிராமத்தில், நீரினால் பரவும் ஒரு பொதுவான நோயான இரைப்பை குடல் அழற்சியின் கடுமையான வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 8 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 130 குடும்பங்கள் வசிக்கும் மற்றும் மியான்மரின் எல்லையை ஒட்டியுள்ள இந்த தொலைதூர குக்கிராமத்தில், […]

