மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சந்தானம் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வர் என்பவரது மனைவி மனிஷா (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கணவர் கிடைக்காததால், மனிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், கடந்த முன்தினம் அப்பகுதியில் உள்ள அணையில் இருந்து ஒரு ஆணின் […]

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலை மற்றும் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். இந்தச் சம்பவம் தொடர்பாக, 34 வயதான பேருந்து ஓட்டுநர் ஒருவரை கைது செய்து போலீசார் நடத்திய […]

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பட்காம் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவம், பட்காம் மாவட்டத்தின் பலார் பகுதியை நோக்கி நெடுஞ்சாலையில் கார் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. அக்கார் மீது, எதிரே வந்த லாரி ஒன்று திடீரென […]

உலகமே கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில், அதுபோன்ற ஒரு புதிய பெருந்தொற்றை உருவாக்கும் ஆபத்து நிறைந்த ஒருவகை வைரஸ் பாதிப்பு தற்போது மனிதர்களிடையேயும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அடுத்து ஒரு உலகளாவிய பெருந்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ், உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டு, கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர பல ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்காவில் ஒருவருக்கு H5N5 பறவை காய்ச்சல் தொற்று […]

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்குகிறது. இதனால் ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிவித்து சபரிமலை கோயிலுக்கு செல்வார்கள். இந்தநிலையில், சபரிமலையில் இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் 18 படிகள் வழியாக வந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து, பின்னர் புதிய மேல் சாந்திகளான சபரிமலை – […]

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவத்தில், 3 வயது சிறுமி ஒருவர் கார் மோதி இழுத்துச் செல்லப்பட்டும் அதிசயமாக உயிர் தப்பியுள்ளார். காரை ஓட்டியதும், ஓட்டுநர் உரிமம் இல்லாத ஒரு டீனேஜ் சிறுவன் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை நடைபெற்ற நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலர் போக்குவரத்து விதிகளை மீறிய இந்த மோசமான செயலை கண்டித்து […]

டெல்லி செங்கோட்டைக்குப் அருகே ஏற்பட்ட கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக, பத்தன்கோட்டைச் சேர்ந்த ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 45 வயதான டாக்டர் ரயீஸ் அஹ்மது பட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையில், அவருக்கும் மற்றும் வெடிப்புக்கு பொறுப்பானதாக கைது செய்யப்பட்ட டாக்டர் உமர் நபி ஆகியோருக்கிடையே தொடர்புகள் இருந்ததாக அதிகாரிகள் கூறியதால், அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். டாக்டர் ரயீஸ் அஹ்மது பட் தற்போது பத்தன்கோட்டில் […]

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள “நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், என் குடும்பத்தை நான் துறக்கிறேன்… இதைத்தான் சஞ்சய் யாதவும் ரமீஸ்வும் என்னிடம் கேட்டார்கள் … மேலும் நான் எல்லா பழிகளையும் […]

விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு பெரிய நற்செய்தியை வழங்கியுள்ளது. பிரதம மந்திரி கிசான் நிதியின் 21வது தவணை தொடர்பாக ஒரு பெரிய அப்டேட்டை வழங்கியுள்ளது. கோடிக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கும் பிரதம மந்திரி கிசான் நிதி வெளியீட்டு தேதி வந்துவிட்டது. இந்த தேதியை மத்திய வேளாண் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. எப்போது? பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணை நவம்பர் 19, 2025 அன்று வெளியிடப்படும். […]

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகிலுள்ள நவ்காம் பகுதி காவல் நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தற்செயல் வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 29 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஹரியானாவின் பாரிதாபாதில் பறிமுதல் செய்யப்பட்ட ‘வைட் காலர்’ பயங்கரவாத நெட்வொர்க் வழக்கில் பெருமளவு வெடி மருந்து குவியலில் இருந்து மாதிரிகளை எடுக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் […]