மத்திய பணியாளர் தேர்வாணையம் பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணி மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர் மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு 2025 குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்களில் பன்முகத்திறன் பணியாளராக […]

இந்தியாவில் பல வரலாற்று கோட்டைகள் உள்ளன, அவற்றில் ஆழமான மர்மங்கள் சூழ்ந்துள்ளன. இங்கு ஆட்சி செய்த மன்னர்கள் தங்கள் ராஜ்யத்தைப் பாதுகாக்க கோட்டைகளைக் கட்டினார்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோட்டைகளும், தனித்துவமான அம்சங்களையும் வரலாற்றுக் கதைகளையும் பெருமைப்படுத்துகின்றன. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருத் என்ற கடற்கரை கிராமத்தில் இதேபோன்ற ஒரு கோட்டை அமைந்துள்ளது, இது முருத் ஜஞ்சிரா கோட்டை என்று அழைக்கப்படுகிறது . கடல் மட்டத்திலிருந்து 90 அடி […]

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு சீராக இல்லை எனவும், […]

ரயில் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த மொபைல் RailOne செயலியை இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.. நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரயில் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த மொபைல் RailOne செயலியை இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.. […]

நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்த பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1, 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பரமக்குடி நெடுஞ்சாலைத் திட்டத்தை அமைப்பதற்காக வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை , ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம் , […]

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.. இந்த நிலையில் இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் பணி தொடங்கி உள்ளது. புரொபேஷனரி அதிகாரி/மேலாண்மை பயிற்சிப் பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 21 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை மூலம் பல்வேறு வங்கிகளில் 5208 காலியிடங்களை நிரப்பப்பட உள்ளது. IBPS PO ஆட்சேர்ப்பு 2025: காலியிடங்கள் தகுதி விண்ணப்பதாரர்கள் ஜூலை […]

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் கடைகளில் இருந்து சமோசாக்களை லஞ்சமாக வாங்கி கொண்டு வழக்கை முடித்து வைத்ததாக சிறுமியின் தந்தை மனுதாக்கல். கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று 14 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரேஷ் என்பவர் சிறுமியை பக்கத்தில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து […]

அரசு மானியம் வழங்கும் இந்த திட்டத்தில் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. ஏழை, எளிய மக்கள் மின் கட்டணங்களைக் குறைத்து நிலையான வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சூரிய சக்தி முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பொதுமக்க இனி தங்கள் வீடுகளின் கூரைகளில் நிறுவப்பட்ட சூரிய சக்தி பேனல்களைப் பயன்படுத்தி தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம், இந்த செயல்முறையை அணுகக்கூடியதாகவும் சிக்கனமாகவும் […]

மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் 18 வயதான நர்சிங் மாணவி காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. சந்தியா சவுத்ரி என்ற அந்த பெண் வழக்கம் போல் நேற்று மருத்துவமனையில் பணி செய்து வந்தார். அப்போது அங்கு வந்த இளைஞன் மாணவியை சரமாரியாக தாக்கினார். மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் இருந்த போதிலும் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த […]