ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்த வழக்கில், உணவு பொட்டலங்களில் தயாரிப்பு தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு ‘ஷவர்மா’ சாப்பிட்ட 16 வயது இளம்பெண், திடீரென உயிரிழந்தார். கெட்டுப்போன பொருட்களால் ஷவர்மா தயாரித்ததால் தனது மகள் இறந்ததாக அப்பெண்ணின் தாயார் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. […]

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது. தற்போது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, விசாகபட்டினத்தில் இருந்து 380 கி.மீ. தொலைவில் […]

இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதோடு மக்கள் இணையதள சேவைகளை பயன்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு ஆண்ட்ராய்டு செல்போன்களின் வருகையே முக்கிய காரணமாகும். இந்நிலையில் இந்திய கணினி அவசர நிலை பதிலளிப்பு குழு ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டங்களில் உள்ள முக்கியமான பல குறைகளை கண்டறிந்து அதன் பயனளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த குறைபாடுகள் […]

மக்கள் தொகை அடிப்படையில் MBBS இடங்களுக்கு அனுமதி வழங்கும் புதிய நடைமுறை வரும் 2025-26 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கும் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி அவசியம். அதற்காக ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்து வருகின்றன. இந்தநிலையில் எம்பிபிஎஸ் இடங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய நெறிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் அண்மையில் வெளியிட்டது. அதில் […]

நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ்-ன் இரண்டு முக்கிய கடன் திட்டங்களான eCOM மற்றும் Insta EMI Card ஆகியவற்றின் கீழ் புதிய கடன்களை அனுமதிப்பதையும், வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டது. இந்திய நிதியியல் சந்தையில் வங்கிகளின் இடத்தை குறிப்பாக சிறிய தொகை கடன்களில் NBFC மற்றும் டிஜிட்டல் நிதி சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையிலும், இதில் முன்னோடியாக இருக்கும் பஜாஜ் ஃபைனான்ஸ் டிஜிட்டல் […]

உலகக்கோப்பை தொடரின் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான அரையிறுதி போட்டியின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷாவுடன், ரஜினிகாந்த் சேர்ந்து அமர்ந்து கிரிக்கெட் பார்த்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் நேரில் கண்டு ரசித்தார். அதன்படி, பல பிரபலங்கள் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவரான சந்திரசேகரன், ஷிகர் தவான் உள்ளிட்டோர் […]

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. […]

இந்தியாவில் விற்கப்படும் 70% ஆண்டிபயாடிக் ஃபிக்ஸட் டோஸ் கலவை மருந்துகள் அங்கீகரிக்கப்படாதவை அல்லது தடைசெய்யப்பட்டவை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத மற்றும் தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக் ஃபிக்ஸட்-டோஸ் கலவை (எஃப்.டி.சி) மருந்துகளை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் பயனற்றவையாகவே உள்ளன என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2020ஆம் ஆண்டில், இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான ஆண்டிபயாடிக் கலவை மருந்துகள் அரசு அங்கீகாரம் பெறாதவை அல்லது தடைசெய்யப்பட்டவை என்று அந்த ஆய்வு […]

பாலிவுட் பிரபலமான நடிகர் தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நானா பட்டேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மீ டூ’ சர்ச்சையில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது புதிய படப்பிடிப்பு உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வைத்து நடைபெற்று வருகிறது. […]

தற்போது பெருமளவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது குறித்த தகவலை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆன்லைன் பாதுகாப்பு என்று வரும்போது, வலுவான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது மற்றும் வெவ்வேறு பாஸ்வேர்ட்களை வெவ்வேறு அக்கவுண்டுகளுக்கு பயன்படுத்துவது போன்றவை அடிப்படையாக நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள். இதனை நினைவூட்டுவதற்காக டெல்லி போலீசார் தற்போது மக்களுக்கு ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். பல்வேறு அக்கவுண்டுகளை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு அக்கவுண்டிற்கும் கஷ்டமான பாஸ்வேர்டை […]