கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101), மாரடைப்பால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை மீனா சந்தித்து பேசி உள்ள நிலையில், அவர் மத்திய இணையமைச்சர் ஆகப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை மீனா. 45 ஆண்டுகளை கடந்தும் மீனா திரையுலகில் பயணித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக மீனா மாறினார். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, […]
பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாகும். ஜூலை 1 முதல் புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. வரி முறையை வலுப்படுத்தவும் மோசடிகளைத் தடுக்கவும் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த புதிய விதியின் கீழ், உங்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், நீங்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, இதுவரை ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதை விரைவில் பெற வேண்டும். இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பைத் தடுக்கும் மற்றும் […]
சபரிமலையில் இந்த ஆண்டு ஆடி மாத பிறப்புக்கும் முன்பாக வரும் ஜூலை 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறத்தில் அமைந்திருந்த நவக்கிரக மண்டபத்தை மற்றொரு இடத்தில் மாற்ற வேண்டும் என தேவப்பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய நவக்கிரக கோயில் ஒரு தனி இடத்தில் கட்டப்படத் தொடங்கியது. தற்போது அதன் கட்டுமானம் நிறைவடைந்து, பிரதிஷ்டை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் […]
ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின. ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது […]
ஜம்முவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்காமல் டெல்லிக்குத் திரும்பியது. டெல்லியில் இருந்து ஜம்மு வழியாக ஸ்ரீநகருக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திங்கள்கிழமை பிற்பகல் அங்கு தரையிறங்குவதற்கு முன்பு மீண்டும் டெல்லிக்கு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், விமானம் டெல்லிக்குத் திரும்புவதற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். விமானம் தேசிய தலைநகருக்குத் திரும்புவதற்கு முன்பு விமான நிலையத்தை பல முறை […]
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகனுக்காக பார்த்து நிச்சயம் செய்த பெண்ணை தானே திருமணம் செய்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷகீல் – ஷபனா தம்பதிக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். 55 வயதான ஷகீல் தனது 17 வயதான மகனுக்கு திருமணத்துக்காக பெண் தேடி, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணைத் தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்துள்ளார். நிச்சயம் செய்த பெண்ணுடன் […]
நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM கிசான்) திட்டத்தின் 20வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 அதாவது 3 தவணைகளாக ரூ.2,000 கிடைக்கும். மேலும் பணம் ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். இருப்பினும், அடுத்த தவணை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், 20வது தவணை […]
மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் எதிர்பார்த்திருந்த அகவிலைப்படி (DA) உயர்வு, ஜூலை மாதத்தில் 4% வரை இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உள்ள 55% DA, இந்த உயர்வுடன் 59% ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில், ஊழியர்களுக்கான முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத DA/DR நிலுவைத் தொகையை வழங்குவது பற்றியும் […]
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி கடந்த 21-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். பொதுவாக ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. இறந்துவிட்டால், அந்த தொகுதி தேர்தல் ஆணையத்தால் காலியானதாக அறிவிக்கப்படும். 6 மாதங்களுக்குள் […]

