இந்தியாவில் ஐ.டி.யில் பணி புரியும் ஊழியர்கள் தற்போது மூன்லைடிங் மேற்கொள்வது அவர்களின் வேலைக்கு ஆப்பாக அமைந்துவிடும் என்ற எச்சரிக்கை பதிவுதான் இது.. ஐ.டி.நிறுவனங்கள் ஊழியர்கள் மூன் லைடிங் எனப்படும் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பது நிறுவனத்தின் விதிமுறைகள் படி அது குற்றமாகும். கொரோனாவால் ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதை […]

ஹாசனாம்பா கோவிலில் தரிசன டிக்கெட் , பிரசாதம் விற்பனை மூலம் 10 நாட்களில் ரூ.1.49 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தன நிர்வாகம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஹாசனாம்பா கோவில் . தீபாவளிப் பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் மட்டுமே இக்கோயிலின் நடை திறந்திருக்கும். இம்முறை கடந்த 13ம் தேதி ஹாசனாம்பா கோயில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் […]

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் சுமார் 40 குரங்குகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யாரோ விஷம் வைத்து இந்த நாச வேலையை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் பகுதியில் நடைபெற்றுள்ளது. அடர்ந்த புதருக்குள் இறந்த நிலையில் குரங்குகளின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயங்கிய நிலையிலும் சில குரங்குகள் இருந்துள்ளன. அதனை காக்கும் நோக்கில் உள்ளூர் மக்கள் அதற்கு உணவு கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால் […]

தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க, உத்தவ் தாக்கரே அணியினர் 2 லாரிகளில் பிரமாணப் பத்திரங்களை எடுத்துச் சென்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியது. மேலும், உத்தவ் தாக்கரே – ஷிண்டே அணிக்கு தனித்தனி பெயர், சின்னத்தை வழங்கியது. அத்துடன், யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாங்கள் […]

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே அதிகாரப்பூர்வதாக பொறுப்பேற்றுக் கொண்டார். மல்லிகார்ஜுன கார்கே, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். சோனியா காந்தி , ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி வதரா மற்றும் மூத்த தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.அதற்கு முன்னதாக கார்கே, இன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் தனது மரியாதையை செலுத்தினார். மேலும் 24 ஆண்டுகளில் காந்தி […]

”ஆதாரம் இல்லாமல் கணவர் மீது அவதூறு சுமத்துவது சித்ரவதைக்கு சமம்” என மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கும், அவருடைய 50 வயது மனைவிக்கும் விவாகரத்து வழங்கி 2005ஆம் ஆண்டு குடும்பநல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ராணுவ அதிகாரியின் மனைவி மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், ”தனது கணவரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி […]

இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி, மறுபக்கம் கடவுளர் லக்‌ஷ்மி, விநாயகரின் படங்களை அச்சடிக்குமாறு பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எத்தனை நடவடிக்கைகள், முயற்சிகள் மேற்கொண்டாலும் இறையருள் இல்லாவிட்டால் அது பலன் தராது. எனவே, பிரதமர் மோடிக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நம் ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்‌ஷ்மி படங்களை அச்சிட்டால் நிச்சயமாக தேசம் […]

மது பாட்டிலுக்குள் செத்த தவளை மிதந்த நிலையில் இருந்தது அதிர்ச்சியடைய செய்துள்ளது. சத்தீஸ்கர் மாவட்டத்தில், ஆசையாசையாய் மதுகுடிக்க குவிந்த குடிமகன்களில் ஒருவர் வாங்கி இருந்த மதுபாட்டிலுக்குள் தவளை இறந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்து சக ‘குடி’மகன்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். பிற மாநிலங்களைப் போலவே சத்தீஸ்கர் மாநிலமும் மது விற்பனையில் களை கட்டியதால் தள்ளாடிக் கொண்டிருந்தது. அம்மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டம், ஹார்டி பகுதி பஜார் தெருவில் இயங்கி வந்த […]

அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராம் லல்லா சிலை நிறுவப்பட்ட பிறகு, ஜனவரி 2024 இல் மகர சங்கராந்தியின் போது அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறக்கப்படும். 1,000 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் அளவுக்கு பூகம்பத்தை எதிர்க்கும் வகையில் உறுதியானதாக கோவில் இருக்கும். இந்தத் தகவலை ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் பகிர்ந்துள்ளார். 1,800 கோடி செலவில் கட்டப்படும் இக்கோயில், 50 சதவீத […]

காதலித்து வந்த பெண் திடீரென திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், ஆத்திரமடைந்த காதலன் அந்தப் பெண் உட்பட 11 பேரை சரமாரியாக தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ஃபிரங்கிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த பிரகாசம் பந்துலு தெருவைச் சார்ந்த மணிகண்டன் (23) என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் மணிகண்டனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் திடீரென […]