டெல்லி உயர்நீதிமன்றம் பெற்றோர் பொறுப்பை வலியுறுத்தும் வகையில் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. தாய் அதிகமாக சம்பாதிக்கிறார் என்பதற்காக மட்டும், தந்தை தனது குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா இந்த தீர்ப்பை வழங்கினார். கீழ்நீதிமன்றம் விதித்த இடைக்கால பராமரிப்பு உத்தரவை எதிர்த்து ஒரு தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மூன்று சிறுவயது குழந்தைகளுக்காக மாதம் […]

சீனாவிலிருந்து இந்தியாவிற்கு அதிக அளவில், குறைந்த விலையில் எஃகு (Steel) பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்ளூர் எஃகு தொழில்துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில், இந்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சில குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீது 3 ஆண்டுகளுக்கு இறக்குமதி சுங்கவரி விதிக்கப்படுகிறது. இந்த சுங்கவரி முதல் ஆண்டில் 12 சதவீதமாக இருக்கும். இரண்டாம் ஆண்டில் இது 11.5 சதவீதமாக […]

உத்தரகாண்ட் மாநிலம் பிபல்கோட்டியில் உள்ள தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டுக் கழகத்தின் (THDC) திட்டப் பகுதியில் சுரங்கப்பாதைக்குள் இரண்டு லோகோ ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 70 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு, பணி மாற்றத்தின் போது நடந்தது. இரண்டு ரயில்களிலும் சுமார் 108 தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஒரு ரயில் மற்றொரு ரயிலின் மீது பின்னால் இருந்து மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த […]

இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜப்பானை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. 2025-ம் ஆண்டிற்கான அரசின் பொருளாதார சீர்திருத்த அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போது 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆக உள்ளது. இந்திய பொருளாதாரம் இதே வேகத்தில் வளர்ந்தால், 2030க்குள் ஜெர்மனியையும் முந்தி உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும் என அரசு தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் இந்தியாவின் GDP 7.3 டிரில்லியன் டாலர் […]

புத்தாண்டை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது அந்த செய்தியில் “மனைவியின் அனுமதி இல்லாமல் மது குடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை” என்று கூறப்பட்டுள்ளது.. இந்த தகவல், பாரதீய ந்யாய சன்ஹிதா (BNS) 2023-இன் ஒரு பிரிவை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த புதிய குற்றச் சட்டம் 2024 ஜூலை 1 முதல் […]

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலின்படி, ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களுக்கு இடையேயான கலாச்சார பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறைகள் என பல்வேறு காரணங்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு நீண்ட விடுமுறை காலம் காத்திருக்கிறது. ஜனவரி மாத முக்கிய விடுமுறைப் பட்டியல் : புத்தாண்டு […]

ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (2025 டிசம்பர் 31) நிறைவடைகிறது. மத்திய வருமான வரித்துறை ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்தும், இன்னும் தங்களது கார்டுகளை இணைக்காதவர்களுக்கு நாளை முதல் பல நிதி நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த இணைப்பை மேற்கொள்ளத் தவறினால், உங்கள் பான் கார்டு முழுமையாக செயலற்றதாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு செயலற்றதாக மாறினால், உங்களால் வருமான வரித் தாக்கல் (ITR) […]

உணவுப் பொருட்களில் கவர்ச்சிக்காக சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள், குறிப்பாக ஆரமைன் (Auramine) போன்ற வேதிப்பொருட்கள், இன்று அமைதியான முறையில் ஒரு மிகப்பெரிய சுகாதாரப் பேரழிவை நோக்கி நம்மைத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. ஜவுளித் துறையில் துணிகளுக்கு சாயமேற்றப் பயன்படுத்தப்படும் இந்த வேதிப்பொருள், சற்றும் மனிதாபிமானமின்றி மிட்டாய்கள், இனிப்புகள் மற்றும் தெருவோர உணவுகளில் கலக்கப்படுவது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவ ரீதியாக பார்க்கையில், ‘ஆரமைன்’ என்பது ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த காரணி […]

இந்தியாவில் இருசக்கர வாகனப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 2026 ஜனவரி 1 முதல் தயாரிக்கப்படும் அனைத்து ரக இருசக்கர வாகனங்களிலும் ‘ஏபிஎஸ்’ (Anti-lock Braking System – ABS) எனப்படும் நவீன பிரேக்கிங் வசதி இருப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, 150 சிசி-க்கு மேல் திறன் […]