ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டத்தில் உள்ள செருக்குப்பள்ளி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன் உப்பல்லா அமர்நாத். ராஜவொலு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய தந்தை மறைவுக்குப் பின், தனது தாய் மற்றும் சகோதரியுடன் தாத்தா-பாட்டி வீட்டில் வசித்து வந்தான். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுவன் அமர்நாத், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பள்ளிக்கு காலை 5 மணிக்கு டியூஷன் […]

இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த ABVP நிர்வாகி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் தீர்த்தஹல்லி பகுதியில் ABVP அமைப்பின் நிர்வாகியாக இருப்பவர் பிரதீக் கவுடா. இவர், அப்பகுதியில் உள்ள சில கல்லூரி மாணவிகள், இளம் பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து வைத்துள்ளார். பின்னர், இந்த அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். […]

சொத்து தகராறில் உறவினரைக் கொடூரமாக கொலைச் செய்த காட்சி ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமானது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோதாவைச் சேர்ந்தவர் பைரவ் சிங் (32). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராம் கிருஷ்ணா என்பவருக்கும் நீண்ட காலமாக சொத்து சம்பந்தமாக பகை இருந்து வந்துள்ளது. சொத்து பிரிப்பதில் தகராறு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், இருவீட்டாரும் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இரு குடும்பங்களும் மீண்டும் […]

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர் மாணவிகளின் பெற்றோருக்கு அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணிலிருந்து சமீபத்தில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் அரசு கல்வி உதவி தொகை வழங்கும் பிரிவிலிருந்து பேசுவதாக தெரிவித்து உங்களுடைய குழந்தைகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் உதவித்தொகை பெறுவதற்கான க்யூ ஆர் குறியீட்டை whatsapp மூலமாக அனுப்பி வைப்போம் அதை ஸ்கேன் செய்தால் உதவி தொகை […]

தென்மேற்கு டெல்லியில் இருக்கின்ற ஆர் கே புரம் அம்பேத்கர் பஸ்திக்கு நேற்று அதிகாலை 4️ மணி அளவில் ஆயுதமேந்திய 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் வந்து லலித் என்பவரின் வீட்டின் கதவை தட்டி கதவின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, கதவை திறந்து வெளியே வந்த லலித் மற்றும் அவரது சகோதரிகள் 2 பேர் உள்ளிட்டோரை அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டு […]

இந்தியா, அமெரிக்கா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் கால் சென்டர் அமைத்து அதன் மூலமாக அமெரிக்க குடிமக்களை ஏமாற்றி அவர்களிடம் 165 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்த 4 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த மோசடி நபர்கள் தங்களை அமெரிக்க வருவாய்த்துறை போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் என்று தெரிவித்து அமெரிக்க குடிமக்களிடம் இணையதளம் மூலமாக பணம் பறித்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த […]

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மூன்றாவது ஜி20 நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம் இன்று முதல் 21, 2023 வரை தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. நிலையான நிதி செயற்குழு கூட்டத்தின் முதல் இரண்டு கூட்டங்கள் முறையே கவுகாத்தி மற்றும் உதய்பூரில் நடைபெற்றன. 3வது சந்திப்பின் போது, நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம், 2023 பணித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வழங்கல்களுக்கான பரிந்துரைகளை இறுதிசெய்வதற்கான விவாதங்களை வழிநடத்துவதில் கவனம் […]

கல்கத்தாவில் இருக்கின்ற ஒரு இரவு விடுதியில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்ட குரங்கு ஒன்றை வாடிக்கையாளர்கள் வேடிக்கையாக கையில் பிடித்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகப்பெரிய கடுமையான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது ஆனாலும் அந்த விடுதி நிர்வாகம் இதனை முற்றிலுமாக மறுத்து இருக்கிறது. சங்கிலியால் பிணைக்கப்பட்ட அந்த குரங்கின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில், நடிகை ஸ்வஸ்திகா […]

நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.88,000 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகள் குறித்த விளக்கம் தவறு என்றும், அச்சகங்களில் அச்சிடப்பட்ட அனைத்து நோட்டுகளும் ரிசர்வ் வங்கிக்கு வந்துவிட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரையில் நாசிக் ரூபாய் நோட்டு அச்சகத்தில் அச்சிடப்பட்ட […]

குஜராத் பிபர்ஜார் புயலின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில் சுமார் 700 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் கடற்கரையோரம் உருவான பிபர்ஜார் புயல் காரணாமாக கடந்த 10 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்த புயலானது, கடந்த வியாழக்கிழமை மாலை குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரம் மழையின் அளவு , காற்றின் வேகம் […]