fbpx

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் 6 பேரை அதிரடியாக நீக்க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சி பணிகளில் தன்னிச்சையாக செயல்பட தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அதிமுக முன்னணி நிர்வாகிகளுடன் தனது வீட்டிலேயே தினமும் ஆலோசனை …

மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீதான விசாரணை வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

காவிரியின் குறுக்கே, ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய நான்கு அணைகளை, கர்நாடக அரசு கட்டியுள்ளது. இதனால், தமிழகத்தில் காவிரி நீரோட்டம் தடைபட்டு உள்ளது. இந்நிலையில், மேகதாது என்ற இடத்தில் புதிய …

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுமுறைப் பயணமாக அடுத்த வாரம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சென்னையில், நடக்க உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட …

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், ”வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், …

அதிமுகவில் தனது ஒப்புதல் இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் புகார் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவில் இரு அணியினரும் சட்டரீதியான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். குறிப்பாக துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், 11 அமைப்புச் செயலாளர்கள், எம்.ஜி.ஆர். …

நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்’ என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதையடுத்து, நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு அளிக்கும்படி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், அசாம் …

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது..

கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் …

அ.தி.மு.கவில் புதிய நிர்வாகிகளை நியமித்து அது தொடர்பான அறிவிப்பையும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவை தடை செய்ய ஓ.பி.எஸ் தரப்பினர் செய்த அனைத்து முயற்சிகளும் எர்கொண்டனர். ஆனால் அது எந்த பலனும் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தலைமை …

அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் நடந்தபோது சரியான நேரத்தில் காவல்துறையை அனுப்பி அதிமுகவினரின் உயிரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றியுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, ”அதிமுகவில் மிக மூத்தவரான பொன்னையன் பல உண்மைகளை அந்த ஆடியோவில் பேசியிருப்பதாக தெரிவித்தார். தனக்கு வரக்கூடிய மிரட்டல்களால் ஆடியோவில் இருப்பது …

சசிகலா மூலம் அமைச்சர் பதவி பெற்றவர்கள், தற்போது நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு சென்றதாக திவாகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவுடன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் நிகழ்ச்சியில் திவாகரன் பேசுகையில், ”அவசர தேவை கருதி சசிகலாவுடன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கிறேன். ஜெயலலிதாவை யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்கள் எல்லாமே சசிகலாவுடன் அன்போடும், ஆதரவோடும் இருக்கின்றனர். தனக்கென்று எதுவும் செய்து …