இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சீனா விஞ்ஞானிகள் மிகச் சிறிய, கொசு அளவிலான ட்ரோன்களை ராணுவ பயன்பாட்டுக்காக உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக South China Morning Post (SCMP) செய்தி நிறுவனத்தின்படி, இந்த மிகச்சிறிய கொசு அளவிலான ட்ரோன் (micro drone) சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹூனான் மாகாணத்தில், தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு (National University of Defence Technology – NUDT) உட்பட்ட ஒரு […]

ChatGPTயிடம் நீங்கள் ஒருபோதும் கேட்க கூடாத ஐந்து விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.. ChatGPT என்பது அனைவரின் விருப்பமான மெய்நிகர் நண்பராக மாறிவிட்டது, அலுவலக மின்னஞ்சல்களுக்கு உதவுவது முதல் இரவு உணவிற்கு என்ன சமைக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது வரை, எல்லாவற்றையும் ChatGPT செய்கிறது. ஆனால் ChatGPT புத்திசாலித்தனமாகத் தோன்றுவதால் சில விஷயங்களைச் செய்ய அது அனுமதிக்கப்படுகிறது (அல்லது முடியும்) என்று அர்த்தமல்ல. உண்மையில், நீங்கள் என்ன செய்யக் கேட்கக்கூடாது என்பது […]

உலகின் மிகப்பெரிய தரவு திருட்டு நடந்துள்ளதாகவும், ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கசிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது. இண்டர்நெட் வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல் சம்பவம் நடந்துள்ளது. ஆம்.. ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வில்லியஸ் பெட்காஸ்காஸ் தலைமையிலான சைபர்நியூஸின் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் இந்த தரவு மீறலை கண்டறிந்துள்ளனர். இதில் ஆப்பிள், ஜிமெயில், […]

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் தொலைத்தொடர்பு, கேபிள் […]

வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி வணிக அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் முன்னணி வங்கிகளுடன் இணைந்து, டிஜிட்டல் ஒப்புதல் முறைமை ஒன்றை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஒப்புதல்கள் இனி ஆஃப்லைனில் இல்லாமல், சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் பதிவாக இருக்கும். இதன் மூலம், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தங்களது […]

பில்லியன் கணக்கான பயனர்களைப் கொண்ட வாட்ஸ்அப்பில், வரும் காலங்களில் விளம்பரங்கள் தோன்றவுள்ளன என்று மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் தனிப்பட்ட அரட்டைகள், அழைப்புகள், குழு உரைகள் ஆகியவை விளம்பரமில்லாமல் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. பயனரின் அனுபவத்தை பாதிக்காமல், தளத்தை வருவாயின் மூலமாக மாற்றும் நோக்கத்தில் மெட்டா இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரைகள், அழைப்புகள், ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் குறியாக்கம் செய்யப்பட்டவை என்றும், அவை விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படமாட்டாது […]

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஐசிடி அகாடமி மூலம் திறன் பயிற்சி வழங்கப்பட்டது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் (ஐசிடி அகாடமி), மாணவர், ஆசிரியர் திறன் மேம்பாடு, தொழில் நிறுவனங்கள் – கல்லூரிகளின் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த 7,533 ஆசிரியர்களுக்கு […]

இன்று மதியம் திடீரென ஜியோ நெட்வொர்க் முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதியடைந்துள்ளனர். இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்து வருகிறது. கோடிக்கணக்கான பயனர்கள் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் பரவலான நெட்வொர்க் பிரச்சனைகளை சந்திப்பதாக புகாரளித்து வருகின்றனர். இணைய இணைப்பு, மொபைல் சிக்னல்கள் மற்றும் ஜியோ ஃபைபர் சேவைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து புகார் கூறி உள்ளனர்.. […]