கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஜூனியர் அசோசியேட் மற்றும் சீனியர் அசோசியேட் பதவிகளுக்கு 120 காலியிடங்கள் உள்ளன. அந்த இடங்களை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை […]

வேலைவாய்ப்பு இணையதளமான Indeed என்ற இணையதளத்தில் பணிபுரியும் 2200 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய வேலை வாய்ப்பு இணையதளங்களில் ஒன்றான Indeed இணையதளம் விளங்கிவருகிறது.வேலை இல்லாத இளைஞர்கள் பலர் Indeed இணையதளம் சென்று தான் வேலை வாய்ப்புகளை பெறுவார்கள் என்றும் அந்த அளவுக்கு நம்பகத்தன்மை உடைய நிறுவனமாக Indeed இருந்துவருகிறது. இந்தநிலையில், இங்கு பணிபுரியும் 2200 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக […]

சுற்றுச்சூழல் மற்றும் மரபணு காரணிகள், உடல் பருமன் ஆகியவை பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பெருங்குடல் புற்றுநோய் இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பெருங்குடல் புற்றுநோய் பெரும்பாலும் வயதானவர்களை பாதிக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் இன்று கண்டறியப்படும் புற்றுநோய்களில் ஐந்தில் ஒன்று 55 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படுவதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் புற்றுநோய் கண்காணிப்புக் குழு […]

தாய்ப்பால் கொடுக்கும் போது செல்போன் பயன்படுத்தினால், குழந்தைக்கு மன அழுத்தம், நினைவு திறன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண் தன் ஆரோக்கியத்திலும் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாயின் தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. ஆனால் அதை சரியாக கொடுத்தால் மட்டுமே குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைகளுக்கு நோய் […]

ரூ. 2,000 மேல் கேக் வாங்கினால் ஆவின் வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அமர்ந்து சாப்பிடும் வசதிகளையும் செய்துள்ளது. இந்நிலையில், சென்னையில் முக்கிய ஆவின் பாலகங்களில் 2,000 ரூபாய்க்கு மேல் கேக் வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் வாங்கினால் அந்த வளாகத்தில் பிறந்த நாள் கொண்டாட அனுமதிக்கப்படும் […]

கணினியில் வாட்ஸ் ஆப் வெப் மூலம் வீடியோ கால் பேசலாம் என்றும் மேலும் வாய்ஸ் காலில் 32 நபர்கள் வரை ஒரே நேரத்தில் அழைப்பில் இணைந்திருக்க முடியும் என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களான ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், ஷேர்சாட் உள்ளிட்டவைகளின் பயன்பாடு அனைவரது மத்தியிலும் பெரும் மைல்கல்லாக உள்ளது. இதில் அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் சமூகவலைதளமாக வாட்ஸ் அப் […]

வரும் 28ம் தேதி பூமிக்கு அருகில் 5 கோள்கள் ஒன்றாக தோன்றும் என்றும் இந்த அரிய நிகழ்வை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அனைவரும் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 28ஆம் தேதி செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கோள்கள் ஒன்றாக பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது. அதாவது வரும் 28ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு […]

இ-சேவை மையங்களை அமைந்து நடத்த ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ‌ இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமையானது ‘அனைவருக்கும்‌ இ-சேவை வழங்கும்‌ திட்டத்தின்‌” கீழ்‌ அனைவரும்‌ விண்ணப்பிக்க வலைத்தளம்‌ ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின்‌ முகம்‌ இ-சேவை மையங்களை அமைந்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.விண்ணப்பங்கள்‌ அனைத்தும்‌ இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைத்தளம்‌ […]

இந்திய அஞ்சல் துறையில் தமிழக வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அஞ்சல் துறை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி அஞ்சல் துறையில் போஸ்ட்மேன்,மெயில் கார்டு மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் ஆகிய வேலைகளுக்கு காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இந்த […]

எந்த நேரத்திலும் இமயமலைப் பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் மட்டும் ரிக்டர் அளவுகோலில் 4க்கு மேல் பதிவான 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க் கிழமை மாலை வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், […]