பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மத்திய அரசின், மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயில உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், 2025-26 -ம் நிதி ஆண்டில், 1,000 […]

நவீன வாழ்க்கை முறையால் மக்களை வேகமாகப் பலியாக்கி வரும் நோய்களில் சிறுநீரகப் புற்றுநோய் ஒன்றாகும். மருத்துவ ரீதியாக, இது சிறுநீரக செல் புற்றுநோய் (RCC) என்றும் அழைக்கப்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள செல்கள் அசாதாரணமாக வளரத் தொடங்கும் போது, ​​அவை படிப்படியாக கட்டியின் வடிவத்தை எடுத்து, நோயாளிக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், சிறுநீரக புற்றுநோய் வழக்குகள் அதிகரித்துள்ளன. 99 சதவீத மக்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கும் இதுபோன்ற பல பழக்கவழக்கங்கள் […]

இந்தியாவில் மிகப்பெரிய தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நாட்டில் ஒரு புதிய தங்கச்சுரங்கம் செயல்படத் தொடங்க உள்ளது. எங்கு தெரியுமா? இந்தியாவில் நிலத்தடியில் அதிக தங்க இருப்பு இல்லை, அதனால்தான் வேறு சில நாடுகளைப் போல இங்கு தங்கம் பெரிய அளவில் காணப்படவில்லை. ஆனால் சமீபத்தில், இந்தியாவில் மிகப்பெரிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, ஒரு புதிய தங்கச் சுரங்கம் செயல்படத் தொடங்க […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான (COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2024) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 453 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 17.06.2025க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை – 453 காலியிட விவரம்: Indian Military Academy – 100 Indian Naval Academy – 26 Air Force Academy – 32 Officers’ […]

”உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை.. ஆனால், விந்தணு தானம் மூலம் மட்டும் குழந்தையை பெற்றுக் கொள்ளாதீர்கள்” என்று சமூக வலைதளத்தில் ஒரு பெண் கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார். ரெடிட் சமூக வலைதளத்தில் பெண் ஒருவர், “விந்தணு தானம் பெற்று நானும் எனது கணவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். முதலில் எனது கணவர் குழந்தையை பாசத்துடன் வளர்த்து வந்தார். ஆனால், குழந்தைக்கு 2 வயது ஆனவுடன், […]

பவர் பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா? அதற்கான விதிமுறைகள், அதிகாரங்கள் என்னென்ன? இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். பவர் பத்திரம் (Power of Attorney) என்பது, ஒரு சொத்தின் உரிமையாளர் தன்னால் நேரில் செய்ய முடியாத சொத்து தொடர்பான செயல்களை செய்யும் வகையில், மற்றொருவருக்கு (முகவர்) எழுத்துப்பூர்வமாக அதிகாரம் அளிக்கும் சட்ட ஆவணம் ஆகும். இது, முகவருக்கு விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. அதாவது, சொத்தை விற்பதற்கு, நிலத்தை மனைப்பிரிவுகளாக மாற்றுவதற்கு, […]

291 கி.மீ தூரத்தை கடக்க 12 மணி நேரம் எடுக்கும் உலகின் மிகவும் மெதுவான ரயில் பற்றி தெரியுமா? நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் வசதியாக மாற்றியமைத்த பல முயற்சிகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணிகளை […]

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த 2,000 தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்பிலான பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும். அதாவது, ரூ.2,500 […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு திமுக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில், தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின், துணை முதலமைச்சர் […]

கச்சா பாமாயில், கச்சா சூரியகாந்தி, கச்சா சோயாபீன் எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை சுங்கவரி 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பாமாயில், சூரியகாந்தி உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரூ.135 என்ற நிலையில் இருந்த பாமாயில், தற்போது ரூ.125-க்கு விற்பனையாகிறது. சூரியகாந்தி எண்ணெய்யும் லிட்டருக்கு ரூ.10 வரை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். பாமாயில், சூரியகாந்தி, சோயாபீன் எண்ணெய்களுக்கான இறக்குமதி […]