நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாத இறுதியில் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக மாத கடைசி நாட்களிலேயே சம்பளப் பரிவர்த்தனைகள் நடைபெறும் என்பதால், இந்த வேலைநிறுத்தத்தால் உரிய காலத்தில் ஊதியம் கிடைக்குமா, […]

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் தம்பதியினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் விவாகரத்து கோரியும், மனைவி திருமண உரிமைகளை மீட்டெடுத்துத் தரக் கோரியும் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தனர். இந்த வழக்கின் விசாரணையின்போது, கடந்த அரை நூற்றாண்டில் பெண்கள் அதிகளவில் கல்வி பயின்று, பல்வேறு […]

தமிழகத்தில் நிலவி வரும் தீவிர பருவநிலை மாற்றத்தின் காரணமாக, டெங்கு காய்ச்சலுடன் இணைந்து பல்வேறு வகையான சுவாசப்பாதை வைரஸ் தொற்றுகளும் ஒரே நேரத்தில் அதிவேகமாகப் பரவி வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ‘இன்ப்ளுயன்ஸா ஏ’, அடினோ, ஆர்.எஸ்.வி (சுவாச ஒத்திசைவு வைரஸ்), கொரோனா மற்றும் சின்னம்மை போன்ற காற்றுவழி பரவும் நோய்களுடன், ‘ஸ்கிரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி காய்ச்சலின் தாக்கமும் பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்த தொற்றுகளால் […]

மார்பக புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பது மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமா என்ற சந்தேகமும் கேள்விகளும் பல பெண்களுக்கு எழக்கூடும். “போதுமான அளவு பால் சுரக்குமா?”, “தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா?”, “புற்றுநோய் மீண்டும் வருமா?”, “ஒரு பக்க மார்பகம் அகற்றப்பட்டால் என்ன செய்வது?” போன்ற பல்வேறு பயங்கள் அவர்களிடம் இருக்கும். ஆனால், மார்பகப் புற்றுநோய் பாதிப்புக்குப் பிறகும் தாய்ப்பால் கொடுப்பது முற்றிலும் சாத்தியமே என்று மருத்துவ நிபுணர்கள் […]

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026 விற்பனை அக்டோபர் 8-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், ஆடை வடிவமைப்புப் பொருட்கள், அழகுச் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் பெருமளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன. எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடித் தள்ளுபடி வழங்கப்படும். தகுதிவாய்ந்த எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் […]

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் குறித்த உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலோர மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர், கடல் அரிப்பு, கடல் நீர் உட்புகுதல் மற்றும் வெள்ள அபாயம் உள்ள கடலோரப் பகுதிகளை […]

தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தை உறுதிசெய்யும் தவெக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான ‘வெற்றிப் பயணம்’ திட்ட முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப். 21) முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து, காந்தி ஜெயந்தியான வரும் அக்டோபர் 2-ஆம் தேதி இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், […]

தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் அதனுடன் கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனுடன் தெற்கு உள்கர்நாடகா வரை மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திரப் […]

தமிழக அரசுத் துறைகளில் ஊழலை ஒழித்து, நிர்வாகச் சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் நோக்கில், ஒரே அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டுள்ள ஊழியர்களை கண்டறிந்து உடனடியாக பணியிட மாற்றம் செய்ய தவெக அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அரசு அலுவலகங்களில் ஒரே இடத்தில் நீண்ட காலம் ஒரே நபர் பணியாற்றி வரும்போது, நிர்வாகத்தில் மந்தநிலை ஏற்படுவதோடு, பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் தேவையில்லாத நெருக்கம் ஏற்பட்டு முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக அரசு கருதுகிறது. குறிப்பாகக் […]

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலை தொடர்ந்து ‘ஸ்க்ரப் டைபஸ்’ (Scrub Typhus) எனப்படும் ‘உண்ணி காய்ச்சல்’ பாதிப்பு மக்களிடையே பரவலாக அதிகரித்து வருவதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், பருவமழை மாற்றங்களால் பல்வேறு வகையான வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் தீவிரமடைந்து வருகின்றன. இதில் ‘ஓரியண்டியா சுட்சுகாமுஷி’ (Orientia tsutsugamushi) என்ற பாக்டீரியா தொற்று மூலமாக […]