சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் […]

உக்ரைன் மீதான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உள்நாட்டிலும் அரசியல் வட்டாரத்திலும் கடுமையான நெருக்கடிகள் எழுந்துள்ளதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரபல சர்வதேச இதழான The Economist மற்றும் புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உக்ரைன் போரில் முழுமையான வெற்றியை ஈட்ட முடியாமல் பின்வாங்கினால், அது புதினின் சொந்த அரசியல் எதிர்காலத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்ற […]

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் மிக முக்கியமான அத்தியாயம் சர்க்காரியா ஆணையத்தின் விசாரணை மற்றும் அதன் அறிக்கை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். திமுகவில் இருந்தபோது அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த எம்.ஜி.ஆர், அதன் தொடர்ச்சியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிமுகவை தொடங்கிய அவர், திமுக அரசு மீது தீவிர ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த […]

காபி குடிப்பது மார்பகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா என்ற கவலை பல பெண்களிடம் உள்ளது. ஆனால், இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி இதற்காகப் பயப்படத் தேவையில்லை என்றே தெரியவந்துள்ளது. மாறாக, வழக்கமாக காபி அருந்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆபத்து மிதமாகக் குறையக்கூடும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காபி மார்பகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா என்ற கேள்விக்கு, அது அதிகரிக்காது மாறாக உதவிகரமாக இருக்கலாம் என்று மார்பக நிபுணர் டாக்டர் […]

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, கிராமப்புறங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற நுகர்வோரைப் போலவே கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை புதிய சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். […]

தமிழகத்தில் பண்டிகை காலங்கள் அடுத்தடுத்து நெருங்கி வரும் சூழலில், மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி, சமையல் எண்ணெய், பூண்டு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த இரண்டு மாதங்களில் 20 சதவீதம் வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் துண்டை ஏற்படுத்தியுள்ளது. மளிகைப் பொருட்களில் காரத்திற்குப் பயன்படும் மிளகாய் வற்றல் கிலோ ரூ.220-லிருந்து தரத்திற்கு ஏற்ப ரூ.270 […]

இந்தியாவில் ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினைகளின் தன்மை தொடர்ந்து மாறி வருகிறது. ஒருபுறம் ஊட்டச்சத்துக் குறைபாடு நீடிக்கும் நிலையில், மறுபுறம் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்காத பிரச்சினையும் பல்வேறு வயதினரிடையே அதிக கவனத்தைப் பெறுகிறது. குறிப்பாக Vitamin B12 மற்றும் Vitamin D குறைபாடு உடலின் ஆற்றல், நரம்புகள், தசைகள், எலும்புகள் உள்ளிட்ட பல முக்கிய செயல்பாடுகளை பாதிக்கக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் இந்த இரண்டு சத்துகளின் குறைபாடு […]

பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மட்டுமின்றி, உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கக்கூடிய முக்கியமான ஹார்மோன் தொடர்பான பிரச்சினைகளில் ஒன்றாக PCOS எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் உள்ளது. இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உடல் எடை அதிகமாக இருந்தால் மட்டுமே PCOS ஏற்படும் என்ற தவறான எண்ணமும் பலரிடம் உள்ளது. உடல் எடை மற்றும் BMI இயல்பான நிலையில் இருக்கும் பெண்களுக்கும் PCOS ஏற்படலாம். இதனை […]

உலக புகழ்பெற்ற எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான டைசன் (Dyson), வாயின் உட்பகுதியை துல்லியமாக கண்காணிக்கும் கேமரா, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மவுத்வாஷ் தெளிப்பான் வசதிகளுடன் கூடிய ‘கேமராஜெட்’ (CameraJet) என்ற அதிநவீன எலக்ட்ரிக் டூத்பிரஷை அறிமுகம் செய்துள்ளது. பாரிஸ் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனத்திற்கு அமெரிக்க மதிப்பில் 499.99 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 47,000 ரூபாய் என விலை […]

தற்கால அவசர மற்றும் இயந்திர வாழ்க்கையில், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த அழுத்தத்தில் இருந்து விடுபடவும், வார இறுதி விடுமுறை நாட்களை புத்துணர்ச்சியுடன் கழிக்கவும் பலரும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு மலையேற்றம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மலையேற்ற பிரியர்களின் விருப்ப பட்டியலில் முதலிடம் பிடித்து […]