தற்போதைய நவீன காலத்தில் செல்போன் இல்லாத நாளை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மக்களின் அன்றாட வாழ்வில் நீங்க முடியாத ஒரு அங்கமாக செல்போன் மற்றும் அதன் பயன்பாடு மாறிவிட்டது. இந்நிலையில் அதிகப்படியான செல்போன் பயன்பாட்டின் காரணமாக அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால் புற்றுநோய் மற்றும் மூளையில் கட்டி போன்றவை போன்ற வாய்ப்பு உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவற்றில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். […]

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி வங்கிகள் தனது வாடிக்கையாளரிடம் சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆர்பிஐயின் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மார்ச் 19ஆம் தேதிக்குள் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். இதை முடிக்காத பட்சத்தில் வங்கிக் கணக்கு சேவைகள் பாதிக்கப்படலாம் அல்லது கணக்கு முடக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

JOB: 2553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) Advt No 01/2024 இன் கீழ் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (General) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கும், மேலும் விண்ணப்ப படிவத்தை […]

குறுஞ்செய்தி (SMS) மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டால் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலமாக சம்மந்தப்பட்ட நபர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பாராளுமன்ற தேர்தல் 2024-க்கான தேர்தல் அறிவிப்பு 16.03.24-ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்திடும் பொருட்டு குறுஞ்செய்தி (SMS) […]

வங்கி வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க இன்றுடன் (மார்ச் 19) கால அவகாசம் முடிவடைகிறது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.. பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2023 டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலும் KYC சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு, மார்ச் 19 (இன்று) வரை […]

Gold loan: கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைக்கடன் மீதான மதிப்பை உயர்த்தி உள்ளதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகள் அதன் உறுப்பினர்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இவ்வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு மற்ற வங்கிகளை விட குறைந்த அளவிலான வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். இதைப்போலவே மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் […]

தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. […]

அனைத்து பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்களும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பேமெண்ட் வழங்குனருக்கு மாறுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பதிவில் உங்களது பழைய பேடிஎம் ஃபாஸ்டேகை எவ்வாறு நிறைவு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதலின்படி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகள் இன்று நல்லிரவோடு முடிவுக்கு வருகிறது. இதனால் பேடிஎம் ஃபாஸ்டேக் பயனாளர்கள் தங்களது கணக்கை புதிதாக […]

டிஜிட்டல் போட்டி சட்டத்திற்கான வரைவு மசோதா மற்றும் ஆய்வறிக்கையை கார்ப்பரேட் விவகார செயலாளர் மனோஜ் கோவில் தலைமையிலான 16 பேர் கொண்ட குழு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தக் குழு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டிஜிட்டல் போட்டி சட்டம் மசோதாவை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த பதிவில் காணலாம். டிஜிட்டல் போட்டி […]

Loan: இந்திய அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் பான் அட்டை வைத்திருப்பது அவசியம், ஏனெனில் இது அவர்களின் பரிவர்த்தனை நடவடிக்கைகளை கண்காணிக்க அரசாங்கத்திற்கு உதவுகிறது. இருப்பினும், 50,000 ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு குறிப்பாக பான் கார்டு அவசியம். நீங்கள் பான் கார்டு இல்லாமல் தனிநபர் கடன் வாங்க முற்படும் பொழுது, நீங்கள் பான் கார்டு இல்லாமல் உங்கள் வங்கியிலிருந்து அதிகபட்சமாக 50000 ரூபாய் கடனைப் பெறலாம். இந்த பினா பான் […]