கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இஸ்லாமாபாத்திற்கும் காபூலுக்கும் இடையில் தற்போது எந்தவிதமான உறவும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை, இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளை மிகவும் மோசமாக்கியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ஆசிஃப், “தற்போதுள்ள நிலைமை ஒரு இறுக்கமான தேக்கநிலை தான். நேரடிப் பகைமை இல்லை. ஆனால், சூழல் […]

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு காசா போரை நிறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது “மிகவும் நல்ல நண்பர்” பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார். எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டின் போது பேசிய ட்ரம்ப், “இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய மிகச் சிறந்த நண்பர் ஒருவர் தலைமை பதவியில் இருக்கிறார், அவர் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார்” என்று […]

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், ஒரு பள்ளி ஆசிரியைக்கும் அதே பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ள உறவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான அந்த ஆசிரியை, பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட ஒரு முன்னாள் மாணவருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், அந்த […]

உலக அளவில் காலநிலை மாற்றங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதேபோல், பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தான், ஜப்பானில் காய்ச்சல் மற்றும் சளி தொற்றுகள் தேசிய அளவில் ‘தொற்று அபாய எச்சரிக்கையை’ (Epidemic) அறிவிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளன. பொதுவாக, ஒரு நோய் குறிப்பிட்ட பகுதிக்குள் மிக அதிகமாகப் பரவும்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படும். ஜப்பான் முழுவதும் பல நூறு பள்ளிகள், […]

பாகிஸ்தானில் நடந்த வன்முறை போராட்டங்களின் போது TLP(Tehreek-e-Labbaik Pakistan)) தலைவர் சாதிக் ரிஸ்வி மீது 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மேலும் 250 போராட்டக்காரர்கள் மற்றும் 48 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா அமைதித் திட்டத்திற்கு எதிராக தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) என்ற தீவிரவாதக் கட்சி பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தியதால் பாகிஸ்தான் கடுமையான வன்முறையைச் சந்தித்தது. இந்த மோதல்களின் போது TLP தலைவர் மௌலானா சாதிக் […]

“இந்தியாவும் பாகிஸ்தானும் இனிமையாக இணைந்து வாழப்போகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். எகிப்தில் நடத்தப்பட்ட காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தெற்காசிய உறவுகள் குறித்து நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்தார். அப்போது, “பாகிஸ்தானும் இந்தியாவும் மிகவும் நன்றாக ஒன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து கூறினார். இதற்கு ஷெபாஸ் ஷெரீப் […]

தென்னாப்பிரிக்காவின் மலைப் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று சாலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில், தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே சுமார் 400 […]

மலேசியாவில், தனது காதலன் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்து ஆத்திரமடைந்த 34 வயது வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த பெண், காதலனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டித் துண்டித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், தஸ்லீமா (பெயர் மாற்றப்பட்டது) என்ற அந்தப் பெண், தனது காதலன் பூபேஸ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவருடன் மலேசியாவில் பழகி வந்துள்ளார். ஆனால், பூபேஸ் தனது திருமணத்தை மறைத்து தஸ்லீமாவுடன் உறவு வைத்திருந்ததுடன், வங்கதேசத்தில் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (நெசெட்) உரையாற்றினார்.. அப்போது எம்.பிக்கள் எழுந்து நின்று கைதட்டி ட்ரம்பை பாராட்டினர்.. அமர்வின் போது, ​​வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி ஆகியோர் அமெரிக்க-இஸ்ரேல் உறவுகளை வலுப்படுத்துவதில் வகித்த பங்கிற்காக சிறப்புப் பாராட்டுதல்களைப் பெற்றனர். நெசெட்டில் உரையாற்றிய ட்ரம்ப், இதை “ஆழ்ந்த மகிழ்ச்சி, உயர்ந்து வரும் நம்பிக்கை […]

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பாராட்டினார். வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் இதுவரை பெற்ற சிறந்த நண்பர் ட்ரம்ப் என்று அவர் குறிப்பிட்டார்.. மேலும் ஹமாஸுக்கு எதிரான போராட்டத்தில் அவரது உறுதியான ஆதரவைப் பாராட்டினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நெதன்யாகு “வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் அரசு இதுவரை பெற்ற சிறந்த நண்பர் டொனால்ட் டிரம்ப். எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலுக்கு இதைவிட அதிகமாகச் செய்ததில்லை” என்று […]