பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே மாதம் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை மீண்டும் நிறுவ பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பாகிஸ்தான் ராணுவம், அதன் உளவுத்துறை நிறுவனமான ISI மற்றும் அரசாங்கம் கணிசமான நிதியுதவி […]

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் பாகிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தாலிபான் என்ற தனி அமைப்பு இந்த தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில், ராணுவ வாகனங்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தற்கொலைப் படைத் தீவிரவாதி மோதியதில், ராணுவ […]

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபோகும் மக்கள் மற்றும் விசா மோசடியில் ஈடுபடுவோர் கடுமையாகக் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது அதிகாரப்பூர்வ X பதிவில், நாட்டின் சட்டத்தை மீறும் எவருக்கும் “குறிப்பிடத்தக்க குற்றத் தண்டனைகள்” வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் குட்டியேற்றத்திற்கு மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மேலும் […]

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவின் சமீபத்திய செனட் வரைவை, உலக பணக்காரரும், டெஸ்லா தலைவருமான எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு, செலவினங்களை குறைப்பதற்காக […]

பிலிப்பைன்ஸின் மின்டானாவ் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 4:37 மணிக்கு ஏற்பட்டது, மேலும் அதன் மையம் தரையில் இருந்து 105 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. தற்போது வரை உயிர் அல்லது சொத்து இழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை, ஆனால் நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மக்கள் பாதுகாப்பாக […]

ஆப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் இதய துடிப்பு போன்று ஆழமான அதிர்வுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் அது கண்டத்தையே துண்டாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவின் அஃபார் பகுதிக்கு அடியில், ஆழமான பகுதியில், இதயத் துடிப்பு போன்ற உருகிய பாறை துடிப்புகளின் அதிர்வுகள் எழுவது புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகவும், மில்லியன் கணக்கான ஆண்டுகளில், இந்த செயல்முறை ஒரு புதிய பெருங்கடலை உருவாக்கும் என்று […]

சுமார் 16,500 கோடீஸ்வரர்கள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளியேறுவார்கள். இது சீனாவிலிருந்து வெளியேறும் 7,800 பணக்காரர்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோடீஸ்வரர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்களின் வேகம் குறையும். ஹென்லி தனியார் செல்வ இடம்பெயர்வு அறிக்கை 2025 இன் படி, இந்த ஆண்டு சுமார் 3500 கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு […]

தேர்தல் பிரச்சாரத்தின்போது துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த அதிபர் டிரம்ப் , அமெரிக்க அதிபர் பதவி என்பது காளை சவாரி செய்வதை விட ஆபத்தான தொழில் என்று தெரிவித்துள்ளார். நாடு தழுவிய தடை உத்தரவுகளை பிறப்பிக்கும் கூட்டாட்சி நீதிமன்றங்களின் திறனைக் கட்டுப்படுத்தியதற்காகவும், பிறப்புரிமை குடியுரிமை உத்தரவு மற்றும் பிற நிர்வாக முடிவுகளை செயல்படுத்துவதில் அரசாங்கம் முன்னேற அனுமதித்ததற்காகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்தார். […]