fbpx

தேசிய செய்திகள்

சினிமா 360°

  • வேலைக்காரி போல இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அஜித்.. அதுமட்டுமில்ல.. முன்னாள் காதலி ஹீரா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்..

    தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்த அஜித், தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    அஜித்தின் முன்னாள் காதலியும் முன்னாள் நடிகையுமான ஹீரா ராஜகோபால், தனது பிரேக் அப் குறித்து தனது வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது பதிவில், அஜித் தனக்கு துரோகம் செய்ததாகவும், ரசிகர்களை வைத்து மிரட்டியதாகவும், தனது பெயரை கெடுத்து அவப்பெயரை ஏற்படுத்தியதாகவும், லஞ்சம் கொடுத்து ஊடகங்களை கட்டுப்படுத்தியதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஹீரா முன் வைத்துள்ளார்.

    ஹீரா ராஜகோபாலின் சமீபத்திய வலைப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது., அதில், நடிகர் அஜித் உடனான காதல் மற்றும் பிரேக் அப் குறித்து பதிவிட்டுள்ளார். அஜித்தின் பெயரை நேரடியாக அவர் தவிர்த்திருந்தாலும், அஜித் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டதாக போலியாகக் கூறி அறுவை சிகிச்சை செய்ததாகவும், அப்போது அவர் அவருக்குப் பக்கத்தில் இருந்தே, அவரை கவனித்துக் கொண்டதாகவும் ஹீரா கூறியுள்ளார்.

    திருமணம் பற்றிய அஜித் கூறிய வார்த்தைகளை பதிவிட்டுள்ள அவர், “நான் ஒரு வேலைக்காரியை போல தோற்றமளிக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், யாரும் அவளைப் பார்க்க மாட்டார்கள், நான் விரும்பும் யாருடனும் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்..

    மேலும் அஜித் கூறியது போல் தான் போதைக்கு அடிமையான நபர் இல்லை எனவும், அவரின் துரோகத்தால் தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் ஹீரா குறிப்பிட்டுள்ளார். அஜித் இன்று பத்ம பூஷண் விருது வாங்க உள்ள நிலையில், ஹீராவின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் புயலை கிளப்பி உள்ளது.

    காதல் கோட்டை படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் – ஹீராவும் நடிகர்களும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் பல படங்களில் ஒன்றாக வேலை செய்தனர். இதனால் அவர்களின் காதல் உறவு மேலும் வலுவானது. இருவரும் காதல் கடிதங்களை பரிமாறிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    அஜித் ஹீராவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஹீராவின் தாயார் அவர்களின் காதலை ஏற்கவில்லை என்றும் அப்போது கூறப்பட்டது. அஜித் – ஹீரா பிரிந்ததற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், 1998 இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர்.

    ஆனால் அடுத்த ஆண்டே, அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜித் ஷாலினியை காதலிக்க தொடங்கினார். இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கினர். 1999 ஆம் ஆண்டில், அஜித் ஷாலினிக்கு தன் காதலை புரபோஸ் செய்தார். 2000-ம் ஆண்டு அஜித் – ஷாலினி ஜோடி திருமணம் செய்து கொண்டது. இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

    நடிகர் அஜித் சமீபத்தில் தனது 25வது திருமண ஆண்டு விழாவை தனது மனைவியுடன் கொண்டாடினார், அதன் காட்சிகள் இணையத்தில் வைரலானது. நடிப்பை தாண்டி, பைக், கார் ரேஸிலும் அஜித் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். கார் ரேஸில் பல வெற்றிகளையும் பதிவு செய்துள்ளார். வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட 24H எண்டூரன்ஸ் ரேஸ் தொடரில் மூன்று வெற்றிகளைப் பெற்றார்.

    முன்னதாக 90களின் இறுதியில் ஹீரா உடனான உறவு குறித்து பேசிய அஜித் “நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம், நான் அவளை மிகவும் விரும்பினேன், ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது; அவள் இப்போது அதே நபர் அல்ல. உண்மையில், அவள் ஒரு போதைக்கு அடிமையானவள்”. என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்

  • பஹல்காம் தாக்குதல்.. பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி.. இந்தியாவுக்கு சொன்ன மெசேஜ் என்ன..?

    தனது நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க உதவுவதாகவும் சீனா தெரிவித்துள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ள நிலையில், இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அழைப்பு விடுத்துள்ளார்.

    பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடனான தொலைபேசி உரையாடலின் போது, ​​பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிந்தைய முன்னேற்றங்களை சீனா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை” ஆதரிப்பதாகவும் வாங் கூறியதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “சீனா எப்போதும் பாகிஸ்தானை அதன் உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆதரித்து வருகிறது. ஒரு உறுதியான நண்பராகவும், அனைத்து வானிலை மூலோபாய பங்காளியாகவும், சீனா பாகிஸ்தானின் நியாயமான பாதுகாப்பு கவலைகளை முழுமையாகப் புரிந்துகொள்கிறது. அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதில் பாகிஸ்தானை ஆதரிக்கிறது,” என்று வாங் கூறியுள்ளார்.

    “தற்போதைய சூழ்நிலையின் வளர்ச்சியை” சீனா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் “விரைவில் ஒரு பாரபட்சமற்ற விசாரணையை ஆதரிக்கிறது” என்று வாங் கூறினார்.

    மோதல் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அடிப்படை நலன்களுக்கு நல்லதல்ல. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உகந்ததல்ல, மேலும் இரு நாடுகளும் “கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும், இருநாடுகளும் சந்தித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்” என்று அவர் கூறினார்.

    பாகிஸ்தானின் துணைப் பிரதமராக இருக்கும் டார், பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டங்கள் குறித்து வாங்கிடம் விளக்கினார், மேலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இஸ்லாமாபாத் எப்போதும் உறுதியாக இருந்து வருவதாகவும், நிலைமை மோசமடைய வழிவகுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதை எதிர்க்கிறது” என்றும் சீன வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறியது.

    இந்தியாவின் “ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்” மற்றும் “பாகிஸ்தானுக்கு எதிரான அதன் ஆதாரமற்ற பிரச்சாரத்தை” டார் நிராகரித்ததாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    “சீனாவின் நிலையான மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்கு பாராட்டுக்களை” டார் தெரிவித்தார், மேலும் அனைத்து வானிலை மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மைக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வைக்கு பாகிஸ்தானின் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    “இரு தரப்பினரும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலை ஊக்குவிப்பதற்கும், ஒருதலைப்பட்சம் மற்றும் மேலாதிக்கக் கொள்கைகளை கூட்டாக எதிர்ப்பதற்கும் தங்கள் உறுதியான தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தினர்,” என்று அது கூறியது.

    சீன மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் கருத்துகளுக்கு இந்திய அதிகாரிகள் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

    ஏப்ரல் 22 அன்று பஹல்காம் அருகே சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றது.

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மற்றும் அட்டாரியில் உள்ள ஒரே செயல்பாட்டு நில எல்லைக் கடவையை மூடுவது உள்ளிட்ட பல பதிலடி நடவடிக்கைகளை இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அறிவித்தது. நதி நீர் நிறுத்தப்படுவது போர் நடவடிக்கையாக பார்க்கப்படும் என்று பாகிஸ்தான் கூறியதுடன், இந்திய விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடுவது மற்றும் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவது போன்ற எதிர் நடவடிக்கைகளை பாகிஸ்தானும் மேற்கொண்டது.

    கடந்த சில நாட்களாக, ஜெய்சங்கரும் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களிடம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பேசியுள்ளனர். உலகத் தலைவர்கள் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    Read More : இந்தியா Vs பாகிஸ்தான் : யாரிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளது? அணு ஆயுத போர் நடந்தால் எந்தெந்த நகரங்கள் அழியும்?

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 11ஆம் வகுப்பு மாணவனை கல்லூரி மாணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணுபரத் (வயது 17) தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், பொதுத்தேர்வு முடிந்து முடிவுக்காக காத்திருந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால், நண்பர்களுடன் அந்த பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவுக்கு நேற்றிரவு சென்றுள்ளான். அப்போது […]

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்த அஜித், தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அஜித்தின் முன்னாள் காதலியும் முன்னாள் நடிகையுமான ஹீரா ராஜகோபால், தனது பிரேக் அப் குறித்து தனது வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது பதிவில், அஜித் தனக்கு துரோகம் செய்ததாகவும், ரசிகர்களை வைத்து மிரட்டியதாகவும், தனது பெயரை […]