தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த பல தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.. அதிமுகவின் வாக்கு வங்கியும் கடுமையாக சரிந்து வருகிறது.. 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு நாங்கள் 6 பேர் இபிஎஸ்-ஐ சந்தித்து பேசினோம்..
இனியும் இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் வெற்றி பெற முடியாது, பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து வலிமையான அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று இபிஎஸ்-இடம் சொன்னோம்.. எங்கள் கோரிக்கைகளை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.. தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்ய சொல்லி வலியுறுத்தினோம்..
அன்றைக்கே உண்மையான ஆய்வுக்கூட்டம் நடந்திருந்தால் உண்மை நிலை தெரிந்திருக்கும்.. இன்றைக்கு, அதிமுகவை ஒன்றிணைக்க மறுக்க காரணத்தால், விலகியர்களை சேர்க்க மறுத்த காரணத்தால், வலிமையான ஒரு அதிமுகவை முன்னிறுத்தாத காரணத்தால், வலிமையான கூட்டணியை அமைக்க மறுக்க காரணத்தால் அதிமுக இன்று படுதோல்வியை சந்தித்துள்ளது..
நிர்வாகிகள் அனைவரும் வலிமையான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று சொன்னோம்.. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. தவெக சார்பில் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.. ஆனால் அவர்களை வெளியேற்றுவதிலேயே இபிஎஸ் குறியாக இருந்தார்.. தவெக மட்டுமல்ல, தேமுதிகவை சேர்ப்பதற்கு கூட அவர் மனம் இல்லை. அவர்களும் வலுக்கட்டாயமாக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
யாரையும் அரவணைக்காமல், நான் மட்டும் இருந்தால் போதும், எனக்கு மட்டும் தான் வாக்களிப்பார்கள் என்ற மனநிலையில் இபிஎஸ் இருந்தார்.. எனக்கு பதவி வேண்டாம், அடிப்படை உறுப்பினராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று ஓபிஎஸ் கடைசி வரை கேட்டார்.. எந்த காரணத்தை கொண்டும் அந்த 4 பேரையும் சேர்க்க மாட்டேன் என்று கூறிவிட்டார்..
ஆனால் இன்று இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், தவறு செய்தவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியிருந்தார்.. இதையே முன்பு செய்திருந்தால், பிரிந்தவர்களை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று அதிமுக ஆட்சி அமைந்திருக்கும்.. அதை கெடுத்தது.. மிகப்பெரிய இயக்கமான அதிமுக படுதோல்வி அடைந்தததற்கு யார் காரணம்..?
இபிஎஸ் செய்த தவறுகளை தான் நாங்கள் சுட்டிக்காட்டினோம்.. தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த பிரச்சனை இல்லை.. எங்களுக்கு தேவை ஒற்றுமையான அதிமுக.. அனைவரையும் ஒன்றிணைத்து பலமான அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.. இபிஎஸ் உடன் இருந்தால் நாங்கள் நல்லவர்கள், இல்லாவிட்டால் துரோகியா..?
அதிமுக பொதுக்குழுவை கூட்டுங்கள்.. அதில் பேசி, முடிவெடுக்க வேண்டும்.. பொதுக்குழு என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.. எல்லோரும் ஒற்றுமையாக செயல்படுவோம்.. இபிஎஸ் மீது தவறு இல்லாதது போலவும், நாங்கள் தவறு செய்துவிட்டது போலவும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.. ஒருபக்கம் பேசலாம் என்று சொல்லிவிட்டு மறுபக்கம் கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்.. நிர்வாகிகளை மிரட்டி வைத்திருக்கிறார்.. இபிஎஸ் எங்களை நீக்கியது செல்லாது.. திமுக உடன் ஆட்சியமைக்க இபிஎஸ் விரும்பினார்.. அதனால் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது..” என்று தெரிவித்தார்..
Read More : Breaking : அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால்.. புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு..! CM விஜய் அதிரடி..!



