பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் (Rakhi Sawant), தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’, ‘கம்பீரம்’ ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவர், ஆதில்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு மாதத்திலேயே ஆதில்கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்திருந்தார் நடிகை ராக்கி சாவந்த்.
இந்த வழக்கில், ஆதில் கைதாகி தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ராக்கி சாவந்தை நான் அடிக்கவில்லை. அவர்தான் என்னை அடித்தார். என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டுகிறார்” என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராக்கி சாவந்த் அளித்துள்ள பேட்டியில், ”ஆதில்கான் தான் எனது நிர்வாண வீடியோக்களை ரூ.47 லட்சத்திற்கு விற்றுள்ளார். நான் குளித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார்.
என் முழு நிர்வாண கோலத்தையும் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். மேலும், என்னை வீட்டில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். என் முகத்தை எப்படி உலகுக்குக் காட்ட முடியும்?. உலகம் முழுவதும் என்னை நிர்வாணமாக பார்த்தால் நான் எங்கே செல்வேன்? விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா?” என்று பரபரப்பு பேட்டியளித்துள்ளார் ராக்கி சாவந்த்.