fbpx

அஸ்வின் போன்ற திறமையான சுழற்பந்து வீச்சாளரை டெஸ்ட் அணியில் சேர்க்காமல் உட்கார வைக்கும் போது, டி20 அணியில் இருந்து விராட் கோலியை ஏன் நீக்க முடியாது? என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில், ”டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய …

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வசித்து வரும் மாளிகையின் சொகுசு வாழ்க்கையை போராட்டக்காரர்களும் வாழ்ந்து பார்த்தனர்.

இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால் நாட்டின் அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டு அதனுள் போராட்டக்குழுவினர் நுழைந்துள்ளனர். அது மட்டுமின்றி பலத்த பாதுகாப்பு நிறைந்த அந்த மாளிகையின் கிட்டத்தட்ட அனைத்து அறைகளிலும் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு …

உள்ளாட்சி இடைத்தேர்தலில் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சி 3-வது வார்டில் கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினருக்கான பதவி காலியாக இருந்ததால் நேற்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, சுயேட்சை என 3 பேர் தேர்தலில் …

தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ எடுத்து வருகிறது. 6-ம் தேதி வரை தருமபுரி …

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, 2022 …

ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்புவதை கே.பி.முனுசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை கோவை செல்வராஜ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கே.பி.முனுசாமி கூலி ஆட்கள் போன்று காசுக்காக வேலை செய்கிறார். எட்டப்பன் போல் செயல்படுகிறார். திமுகவின் …

திருச்சி சுங்கச் சாவடியில் சசிகலா சென்ற கார் கண்ணாடி மீது தானியங்கி தடுப்பு விழுந்து கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசியல் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, அதன் ஒரு பகுதியாக, நேற்று சென்னையில் இருந்து திருச்சி வழியாக காரில் தஞ்சைக்கு சென்று …

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சம் பெற்றிருக்கக் கூடிய நிலையில், கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின்போது, எடப்பாடிக்கு 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த உறுப்பினர்கள் படிப்படியாக எடப்பாடி …

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.. இதனால் இலங்கை மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்..

அடுத்த வருடம் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு? கடும் எச்சரிக்கை - லங்காசிறி  நியூஸ்

மேலும் பொருளாதார …

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடி உள்ளார்..

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் …