செல்போன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள் என்று முதன்முதலில் செல்போனைக் கண்டுபிடித்தவரான மார்ட்டின் கூப்பர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத உலகை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது. பணப் பரிவர்த்தனை முதல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது வரை ஸ்மார்ட்போன் மூலம் செய்ய முடியும். ஸ்மார்ட்போன் இன்று மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கம் ஆகியிருக்கிறது. இந்நிலையில், உலகின் முதல் செல்போனை […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,103 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 31 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 13,929 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர் பள்ளிக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடந்த பள்ளிகள், கடந்த கல்வி ஆண்டின் இறுதியில் இருந்து முழுமையாக செயல்பட துவங்கியுள்ளன. இதனால், மாணவர்களுக்கு இலவச […]
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தை நேரடி பயனாளிகள் பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைத்து தொழில் பழகுநர்களுக்கும் நேரடி அரசாங்க பலன்களை வழங்குகிறது. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அரசு தனது பங்களிப்பை தொழிற்பழகுநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு உதவித்தொகையின் 25 சதவீதம் மாதம் ரூ.1,500 வரை வழங்கப்படும். இது குறித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர […]
திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களைக் குறிவைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் விவாகரத்து ஆன தனது மகனுக்கு மறுமணம் செய்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். இந்நிலையில், திருமணத் தரகர் மூலம் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவரை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். […]
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள அத்திங்கல் பகுதியில் வசித்து வருபவர் மணிக்குட்டன். இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் அத்தையுடன் வசித்து வந்தார். தனது வீட்டின் அருகில் ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வந்த இவர், சமீபத்தில் தான் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கினார். இந்நிலையில், கடந்த இரண்டு […]
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Junior Assistant/ Computer Operator, Head பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என மூன்று காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 60-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் இருக்க வேண்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த […]
அதிமுக வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதில் இருந்து அக்கட்சி முன் எப்போதும் கண்டிராத பல்வேறு அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. சட்டவிதிகளின்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவாதியாகிவிட்டதாக தெரிவிக்கின்றனர். உட்கட்சியில் சிறுசிறு சலசலப்பாக தொடங்கிய இந்த […]
சின்னவர் என்று என்னை அழைக்கச் சொல்லவில்லை என்றும், என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்து கலைஞரை சிறுமைப்படுத்த வேண்டாம் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், “நான் மிகவும் ராசிக்காரன் என ஆர்.எஸ்.பாரதி கூறினார். அதில், எனக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குகளை நான் கேட்டதால் வெற்றி இல்லை. கலைஞர், தளபதி, கட்சி தொண்டர்களால்தான் வெற்றி கிட்டியது. கழக மூத்த […]
சக மாணவிகள் ராகிங் செய்ததால், மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 19 வயது மாணவி, கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொள்ளும் […]