fbpx

மதுரையில் செயல்பட்டு வரும் முருங்கைக்கான சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்தில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மற்றும் தரவு பதிவு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் இளங்கலை அறிவியல் வேளாண்மை அல்லது தோட்டக்கலை முடித்து வெளிநாட்டு வர்த்தகம் அல்லது உலகளாவிய வர்த்தகம் போன்றவற்றில் முதுநிலை வணிக நிர்வாகம் அல்லது வேளாண் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் […]

சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரியினை உரிமையாளர்கள் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சியின் முந்தைய சென்னை மாநகராட்சி அல்லது இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு, இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில், ஏற்கனவே சொத்துவரி […]

அசாம் மாநிலத்தை சேர்ந்த நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.. அவருக்கு வயது 30. அசாமிய திரையுலகில் முக்கியமான நபராக கருதப்பட்டவர் கிஷோர் தாஸ்.. இவர் நடிகர், நடனக் கலைஞர், மாடல் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் என பன்முகத்திறமை கொண்டவர்.. 1991-ம் ஆண்டு பிறந்த கிஷோர் 300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் நடித்துள்ளார்.. கிஷோரின் Turrut Turut என்ற இசை வீடியோ அசாமின் மிகவும் பிரபலமான வீடியோவாக மாறியது. […]

சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 20 ரூபாய் தேநீரை 70 ரூபாய் செலுத்தி அருந்தி அதற்கான ரசீதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த பயணி, கடந்த 28-ஆம் தேதி டெல்லி – போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில் பயணித்துள்ளார். காலை நேரம் என்பதால் அவர் தேநீர் ஆர்டர் செய்துள்ளார். அதற்கான விலையை பார்த்ததும் அவர் அதிர்ச்சிடையந்துள்ளார்.. ஆம்.. அதில் தேநீரின் விலை ரூ.20 என்றும், சேவை […]

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 2022 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசில் உள்ள 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் பெற முடியும். நாட்டில் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் நிலைமையை மோசமாக்கியுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரலில், இந்தியாவில் பணவீக்கம் பல ஆண்டு உச்சத்தைத் தொட்டது. இதனால் தான் அகவிலைப்படி […]

அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் பயனர்களுக்கு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1, 2022 முதல் பயனர்கள் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். இந்த இரண்டு திட்டங்களும் ரூ. 250க்கும் குறைவாகவே உள்ளன. இந்த இரண்டு திட்டங்களுக்கும் நிறுவனம் ரூ. 228 மற்றும் ரூ. 239 என விலை நிர்ணயக்கப்படுள்ளது. மற்ற நிறுவனங்கள் மாதத்தின் பெயரில் 28 […]

மகாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் பிவண்டி. இந்த பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி  தனது தோழிகளுடன் அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.   அப்போது கணேஷ் என்கிற இளைஞர் அந்த சிறுமியிடம் பாசமாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் அந்த சிறுமி மயங்கி இருக்கிறார். உடனே அந்த சிறுமயைதூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த […]

நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக, பழங்குடியின பெண் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்தித்து திரௌபதி முர்மு ஆதரவு கோரினார்.. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பாஜக மற்றும் கூட்டணி தலைவர்களை திரௌபதி முர்மு சந்தித்தார்.. […]

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு போதிய தெளிவு இல்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதிக்கு நேற்று வந்தார். கடந்த 24 ஆம் தேதி வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை சிலர் அடித்து நொறுக்கினர். இந்த நிலையில் தன்னுடை தொகுதியை பார்வையிடுவதற்காக ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக கேரள மாநிலம் வந்துள்ளார். […]

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜி.என்.மில் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் (83). இவர் ஒரு ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். உடனடியாக மின் கட்டணத்தை செலுத்த வில்லை என்றால் இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு மெஸேஜ் வந்தது. உடனடியாக பணத்தை செலுத்த இந்த லிங்கை அழுத்தவும் என அந்த மெஸேஜில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, நடராஜன் அந்த லிங்கை அழுத்தியுள்ளார். பின்னர் […]