தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்று முதல் 6ம் தேதி வரை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அந்த பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. ஆனால் முறையான வழிகாட்டுதல் இன்றி வெளியான அறிவிப்பு காரணமாக தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்தது.. […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய ஒருநாள் பாதிப்பு 2,972- ஆக உயர்ந்த. சென்னையில் ஒருநாள் பாதிப்பு1072 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 1-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.. […]
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோய் திடீரென வராது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே நீண்ட காலமாக இதற்கான அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக தாகம், சோர்வு, திடீர் எடை இழப்பு, அதிகரித்த பசியின்மை, கால்கள் அல்லது கைகளில் கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகள் நீரிழிவு நோய் வருவதற்கு முன்பே உணரப்படுகின்றன. நீரிழிவு நோயின் அறிகுறிகளை கண்டறிந்த உடன், உடனடியாக உங்களை நீங்களே பரிசோதனை […]
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் […]
தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை […]
காலரா பாதிப்பு காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பலர் பாதிக்கப்பட்டு வந்தனர்.. மேலும் பலருக்கு காலரா பாதிப்பு இருப்பது உறுதியானது.. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு நேற்று மருத்துவ குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார்.. […]
மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் ( பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறப்பட்டது.. மேலும் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.. இந்த மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும் மாதம் ரூ.1000 […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குள்ளாகிபாளையத்தை வசித்து வருபவர் சுகுமார். இவர் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். சுகுமாருக்கு, மூன்று வருடங்களுக்கு முன்பு லாவண்யா(28) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. பிரசவம் முடிந்து பெற்றோர் வீட்டில் இருந்து லாவண்யா, கடந்த 15 நாட்களுக்கு முன் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து, சுகமாருக்கும் லாவண்யாவுக்கும் இடையே அடிக்கடி […]
கரூர் மாவட்டத்தில் பள்ள சங்கனூர் கிராமத்தில் வசித்து வரும் தனபாலுக்கு இரண்டு மனைவிகள் ஒருவர் மேனகா இன்னொருவர் அம்பிகா இருவரும் சகோதரிகள். தனபால் மாட்டு வண்டி ஓட்டி பிழைப்பு நடத்தும் தொழிலாளி. அம்பிகாவின் கணவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்ததால். மேனகாவின் சம்மதத்துடன் அம்பிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் தனபால். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் தனது இரண்டாவது மனைவியான அம்பிகாவை […]
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டை மேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள், என சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் […]