ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் திடீர் மழைக்கு ஏற்ப நீர்வரத்து அதிகரிக்கும் என்றாலும், ஜூலை மாதத்தில் தான் நீர்வரத்து அதிக அளவை எட்டும். அப்போது, நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடியை எட்டும்போது ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர கிராமங்களில் […]
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் புக் செய்தவுடன், இருக்கும் இடத்திற்கே சென்று கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சப்ளை செய்து வருவதாக மதுரை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மதுரை மாநகரம் முழுவதும் காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது, தல்லாகுளம் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,280-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]
ரஷ்யா தாக்குதலை தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நாவின் மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) தெரிவித்துள்ளது.. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி 24 அன்று தொடங்கியது, நாட்டின் இராணுவம் எல்லைகளைத் தாண்டி கீவ் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியது. பல மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருவதால் போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் […]
டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன் ரூ.34 ஆயிரம் கோடிக்கு ட்விட்டரின் பங்குகளை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்டிருந்தார். பின்னர், குறுகிய கால இடைவெளிக்குப் பின் ட்விட்டரில் போலி கணக்குகள் குறித்த தகவல்களை அளிக்க தவறியதால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இதனையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு தொடர […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,906 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 45 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,447 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் சிறப்பாக விளையாடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில், இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய், கஷ்யப், சமீர் வெர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இன்று காலை […]
”நமது நாட்டின் பிரதமர் கூட திராவிடன் தான்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சென்னை 134-வது வார்டில் வசிக்கும் மக்களின் சேவைக்காக உருவாக்கியுள்ள உங்கள் மாம்பலம் ஆப் (UMA) எனும் செயலியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ”முதல்முதலில் 2004ஆம் ஆண்டு […]
மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா உலக சாம்பியனாக மாறும் என்று தெரியவந்துள்ளது. ஆம்.. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மொத்த மக்கள் தொகை 800 கோடியை எட்டும், மேலும் 2030 ஆம் ஆண்டில் இந்த மக்கள் தொகை 850 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2050ல் இது 970 மில்லியனாக இருக்கும். 2100-ம் ஆண்டுக்குள் இந்த மக்கள் தொகை 1,040 […]
தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் தங்களது தொழிலை நேரடியாகவோ, வாரிசு தாரர் மூலமாகவோ மீண்டும் அமைக்கவோ அல்லது புதிய தொழில் தொடங்கவோ உதவிடும் வகையில் 25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் பெற்றுக்கொள்ளலாம் […]