நீலகிரியை சேர்ந்தவர் பிரவீன் (22). இவர், கோவையில் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், ஊட்டியில் தற்போது 10ஆம் வகுப்பு படிக்கும் 15 சிறுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதற்கிடையே, இருவருக்கும் மத்தியில் அடிக்கடி சண்டைகள் வரத் தொடங்கின. இதனால், இருவரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இந்த சமயத்தில் தான் பிரவீனுக்கு, ஊட்டியில் படித்து வரும் கல்லூரி […]
பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு […]
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிரே வந்த மற்றொரு கார் மீது பலமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் கார்களில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த […]
தமிழகத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன், பொங்கலுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை ஏப்ரல், மே மாதங்களில்தான் வழங்கி வருகிறது. மேலும், 50 சதவீதத்துக்கும் மேல் வெளி மாநிலங்களில் இருந்து முறைகேடாக வாங்கப்படுவதால், கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். […]
உலகெங்கிலும் உள்ள முருகப் பெருமானின் ஆலயங்களில், அவருக்கு மிகவும் பிரியமானதாகவும், அவரது திருவடிகள் பட்டதாகவும் கருதப்படும் இரண்டு முக்கியத் தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று வள்ளியைத் திருமணம் செய்த வள்ளிமலை, மற்றொன்று திருவிடைக்கழி ஆகும். இவற்றுள் திருவிடைக்கழி முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த தலம் எனப் புராணங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. சூரனை வதம் செய்ததால் வந்த தோஷம் : திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின்னர், சூரபத்மனின் மகனான இரணியாசுரன் […]
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் சந்தைத் தகவல் திட்டங்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இ-நாம் தளம் மற்றும் செல்பேசி செயலி வேளாண் விளைபொருட்களின் நிகழ்நேர மொத்த விலைகளை வழங்குகின்றன. மேலும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு உதவும் அக்மார்க்நெட் தளம், தினசரி வருகை மற்றும் விவசாய விளைபொருட்களின் விலைகள் குறித்த தகவல்களை வழங்குகிறது. மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் கருத்துக்களைக் கருத்தில் […]
பொதுவாக, சிவன் கோயில்கள் அனைத்திலும் வருடத்தில் ஒரே ஒரு முறை, அதாவது ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் மட்டுமே சிவலிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு சிவாலயத்தில் மட்டும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த சிறப்புக்குரிய ஆலயம் தான் திருவாரூரில் அமைந்துள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் ஆகும். அமாவாசை அன்னாபிஷேகத்தின் சிறப்பு […]
இந்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக முத்திரைகள் மற்றும் புவியியல் குறியீடுகள் சோதனையாளர் பதவி, காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவற்றில் காலியாக உள்ள நூறு காலியிடங்களுக்கும், யுபிஎஸ்சி-யில் இரண்டு துணை இயக்குநர் பதவிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய பணியாளர் தேர்வாணையம் […]
ரயில்வே கட்டமைப்பில் கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த இந்த ஆண்டு 1673.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கவாச் என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். கவாச் என்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறந்த அமைப்பாகும்.லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் தவறும் பட்சத்தில் தானியங்கி பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வேக வரம்புகளுக்குள் ரயில்களை இயக்க கவாச் உதவுகிறது. மோசமான […]
விமான ரத்துகளால் ஏற்படும் பயண இடையூறுகளைக் குறைக்க, 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; பரவலான விமான ரத்துகளைத் தொடர்ந்து பயணிகளின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே, வலையமைப்பு முழுவதும் சீரான பயணம் மற்றும் போதுமான தங்குமிட வசதிகளை உறுதி செய்ய விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மொத்தம் 37 ரயில்களில் 116 […]

