மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்ட மருத்துவமனையில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு நகராட்சி குப்பை வாகனத்தில் சடலம் கொண்டு செல்லப்படுவதை அதில் பார்க்க முடிகிறது.. குத்லா காவல் நிலையப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு அடையாளம் காணப்படாத இந்த உடல், தகனத்திற்காக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.. முறையான சவ வாகனம் அல்லது ஆம்புலன்ஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இரும்பு கம்பியால் இழுத்துச் செல்லப்பட்டு குப்பை வண்டியில் ஏற்றப்பட்டது. […]

ஊதுபத்தியில் இருந்து வெளிப்படும் புகை சிகரெட் புகையை விட ஆபத்தானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. வீடுகள், கோயில்கள் மற்றும் தியான அறைகளில் எங்கும் அகர்பத்தி அல்லது ஊதுபத்திகள் ஏற்றி வைக்கப்படுவது பொதுவான நடைமுறை தான்.. இது நறுமணமிக்க, அமைதியான சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆனால் ஊதுபத்தியில் இருந்து வெளிப்படும் புகை சிகரெட் புகையை விட ஆபத்தானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அகர்பத்தி புகையை ஆய்வு செய்துள்ளது. […]

சுப யோகங்களின் சேர்க்கை 5 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளைத் தரும். அவை எந்தெந்த ராசிகள் தெரியுமா? கிரகங்களின் நிலைகளும், அவற்றின் பெயர்ச்சியும் மனிதர்களின் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிடம் கூறுகிறது. இன்று சில சுப யோகங்கள் உருவாகி உள்ளதால் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டமும் நன்மைகளும் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.. சுப கிரக சேர்க்கைகள் ஜூலை 30 புதன்கிழமை, புதன் கிரகத்தின் செல்வாக்கு அதிகமாக […]

வெறும் 11 நாட்களில் ரூ.404 கோடி வசூல் சாதனை பாலிடவும் படம் பற்றி தெரியுமா? மோஹித் சூரி இயக்கத்தில் கடந்த 18-ம் தேதி வெளியான படம் சயாரா.. இந்த படத்தின் நாயகன் அஹான் பாண்டே மற்றும் நாயகி அனீத் பத்தா இருவருமே இந்த படம் மூலம் தான் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளனர்.. ஆனால் தங்கள் முதல் படத்திலேயே இந்த ஜோடி கவனம் பெற தொடங்கிவிட்டனர்.. முழுக்க முழுக்க காதல் படமாக […]

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.. பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.5 கோடி பணத்தை படத்தயாரிப்பு மற்றும் சொந்த செலவுக்கு பயன்படுத்தி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இந்த மோசடி வழக்கில் 2 முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீனிவாசன் 2018 முதல் தலைமறைவாக […]