fbpx

Election: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். வருகின்ற 19ஆம் தேதி முதல் கட்டமாக தமிழகம் …

Rajnath Singh: இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டு பாகிஸ்தானிற்குள் தப்பிச்செல்லும் தீவிரவாதிகளை அந்நாட்டிற்குள் புகுந்து இந்தியா கொல்லும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை, இந்திய உளவாளிகள் …

Earthquake: இந்தியாவில் அடுத்தடுத்து 2 மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் இரவு 11:01 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் 33.34 டிகிரி அட்சரேகை மற்றும் 76.62 டிகிரி தீர்க்கரேகையில் இருந்ததாக NCS …

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று நடிகையும் அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் சர்வே நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் கணிசமான எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என்பதில் பாஜகவினர் உறுதியாக உள்ளனர். அதேபோல், தமிழ்நாட்டில் 19 தொகுதிகளிலும் பாஜக வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் பாஜகவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து …

மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி செய்யப்படுவதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து …

taiwan Earthquake: தைவான் தீவின் கிழக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தைவானின் மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தைவான் நாட்டில் ஹூவாலியன் நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் …

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அரிசியின் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2023ஆம் ஆண்டில் நாட்டில் மக்கள் பயன்படுத்தும் பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிரடியாக உயர்ந்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது.

கடத்த …

குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட “மஞ்சுமெல் பாய்ஸ்” திரைப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் வரிசையாக ஏகப்பட்ட படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களின் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், சத்தமே இல்லாமல் நல்ல படங்களை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கி வெளியிட்டு வருகிறது. …

நம் வீட்டில் அவசர காலத்திற்கென்று சில மாத்திரைகளை முன்பே வாங்கி வைப்பதுண்டு. தலைவலி, சளி போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளை குணப்படுத்த பேராசிட்டமால், மெப்தால் போன்ற மாத்திரைகளை பயன்படுத்துவதுண்டு. எனினும் மாத்திரைகளை பயன்படுத்தும்போது கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரையின்பேரிலேயே உபயோகப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில், ப்ரீகாபலின் மாத்திரை (Pregabalin Tablet) வலிப்பு நோய், நரம்பு …

மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று கோவையில் கட்சி கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை பேசுகையில், ”இந்த முறை 400 எம்பிக்களுக்கு மேல் பாஜக ஜெயிக்கும் …